மொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முதலில் இதை செய்யுங்க... - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

 Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday, 27 July 2020

மொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முதலில் இதை செய்யுங்க...

மொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முதலில் இதை செய்யுங்க...
மொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முதலில் இதை செய்யுங்க...
மொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்து விட்டால் சர்வீஸ் சென்டர்தான் பல சமயங்களில் தீர்வு. அவர்களிடம், போன் தண்ணீரில் விழுந்தது குறித்து பொய் சொல்லக் கூடாது. இப்போது மொபைல்களில் இம்மெர்ஷன் சென்சார் உள்ளது. தண்ணீரில் மொபைல் போன் விழுந்தால் மொபைலில் உள்ள இம்மெர்ஷன் சென்சார் நீருடன் தொடர்பு கொள்வதன் விளைவாக அதன் நிறம் மாறுகிறது. சில இன்சூரன்சுகளில் நீரில் விழுந்த மொபைலுக்கான பணத்தை திரும்ப பெறும் வாய்ப்பு உண்டு. ஆனால், அதற்கு நடந்ததை முழுமையாக, உண்மையாக சொல்வது அவசியம். தண்ணீரில் தவறி விழுந்த ஸ்மார்ட் போனை கையில் எடுத்து உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும். அதன் பிறகும் போன் ஆனில் இருந்தால் அதனை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்.

பிறகு போனை டிஷ்யூ பேப்பரினாலோ அல்லது கையடக்க துணி கொண்டோ நன்கு சுற்றி வைக்க வேண்டும். போனுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஹெட்போன், டேட்டா கேபிள் முதலிய சாதனங்கள் இருந்தால் உடனே இணைப்பை துண்டித்துவிட வேண்டும். சிம் கார்டு மற்றும் மெமரி கார்டை போனில் இருந்து கழற்றி விட வேண்டும். பின்னர் போனை அரிசி நிரப்பப்பட்ட பையில் வைக்க வேண்டும். நீரில் விழுந்த போனை கூடுமானவரை காற்றுப் புகாத பாக்கெட்டுகளில் அடைத்து வைக்க வேண்டும். இப்படி அடைத்து வைக்கும்போது நீரை உறிஞ்சும் வகையிலான சிலவற்றை போனுடன் சேர்த்து பாக்கெட்டுகளில் அடைப்பது கூடுதல் பயன் தரும். சமைக்காத அரிசியானது நீரை உறிஞ்சும் பொருளாக நன்கு செயல்படும்.

காற்று புகாத பைகளில் சமைக்காத அரிசியை ஸ்மார்ட் போனுடன் சேர்த்து 24 முதல் 48 மணி நேரம் வரை வைக்க வேண்டும். போனை ஹேர் டிரையர் கொண்டு உலர்த்த கூடாது. ஹேர் டிரையரிலிருந்து வருவது மிகவும் சூடான காற்றாகும். இந்தச் சூடான காற்றை போனுக்குள் செலுத்தும்போது போனில் உள்ள பலவீனமான மின்னணு கூறுகள் அதன் செயல்பாட்டை இழந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் போனை ஹாட் ஓவன் மற்றும் ரேடியேட்டர் அருகில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். தூயநீர் கொண்டு போனை கழுவுவதை தவிர்க்க வேண்டும். ஸ்மார்ட் போன் ஆனது உப்பு நீரை விட தூயநீரில் விழுந்தால் அதைச் சரி செய்து விடுவது எளிது. எனினும் உப்பு நீரில் விழுந்த போனை தூயநீர் கொண்டு மீண்டும் கழுவுவது என்பது தவறு. ஏனெனில் உப்பு நீரில் விழுந்த போனின் பாகங்கள் ஏற்கனவே ஆக்சிஜனேற்றம் அடைந்து விடுகிறது.

ஸ்மார்ட் போன்கள் நீரில் விழுவது என்பதே அபாயகரமான ஒன்று. எனினும் சில அதிர்ஷ்டம் நிறைந்த போன்கள் மீண்டும் பழையபடி செயல்படும். இவ்வகையான போன்களில் உடனே செய்ய வேண்டியது நமக்கு தேவையான டேட்டாக்களை பேக் அப் செய்வது தான். ஏனெனில் அதிர்ஷ்டவசமாக மறு உயிர் பெற்ற ஸ்மார்ட் போன்களின் உயிர் எப்போது போகும் என தெரியாது. மொபைல் சரியாகிவிட்டதென அப்படியே இருக்க வேண்டாம். உடனே, அதிகாரபூர்வ சேவை மையத்துக்கு மொபைலை கொண்டு செல்லுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad