புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் ஆன்லைன்
வகுப்புகள் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 17 முதல் வளாகம் திறக்க
வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகப் பதிவாளர் சித்ரா
செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள உத்தரவு விவரம்:
''ஆன்லைன் வகுப்புகளுடன் அனைத்துப் பல்கலைக்கழகத் துறைகள், மையங்கள்
ஆகியவற்றுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் கல்வி அமர்வு தொடங்க உள்ளது. ஆகஸ்ட்
17-ம் தேதி முதல் மாணவர்களுக்கு வளாகத்தைத் திறக்க வாய்ப்புள்ளது.
தொற்று நிலை மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவுகளைப்
பொறுத்து வளாகத்திற்குள் நுழைவதற்கான முறைகள் மற்றும் ஆகஸ்ட் 17-ம் தேதி
முதல் வழக்கமான வகுப்புகளைத் தொடங்குவது குறித்து சரியான நேரத்தில்
தெரிவிக்கப்படும்.
பல்கலைக்கழக இணையதளத்தில் தொடர்ந்து இது தொடர்பான விவரங்கள்
பதிவிடப்படும். பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் இணையத்தில் அடுத்தகட்டத் தகவலை
அறியலாம்''.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, 3 July 2020
Home
EDNL NEWS
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆக.3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்; 17-ம் தேதி முதல் வழக்கமான வகுப்புகள்:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆக.3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்; 17-ம் தேதி முதல் வழக்கமான வகுப்புகள்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment