அன்றாட உணவில் புடலங்காய் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்...!Benefits of adding sesame to your daily diet ...! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday 11 June 2020

அன்றாட உணவில் புடலங்காய் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்...!Benefits of adding sesame to your daily diet ...!

*வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.

* புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொரியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள்  நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்துதான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள  உணவு. எனவே கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்.
* புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர வளர்ச்சி உள்ள காயையே பயன்படுத்த வேண்டும். புடலங்காய் மிகுந்த  மருத்துவ குணம் கொண்ட காய்களில் ஒன்று. புடலங்காயை ஆண்களுக்கு அவசியமான ஒன்றாக முன்னோர்கள் சொல்கிறார்கள். அதற்கு காரணமும் உண்டு. இந்த காய் ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டது.

* தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும். அஜீரண கோளாறு அகன்று, எளிதில்  ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். குடல் புண்ணை ஆற்றும்.

*மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்து. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. பெண்களுக்கு உண்டாகும்  வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

* கண் பார்வையை அதிகரிக்கச் செய்கிறது. இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும். வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad