இயற்கையின் அதிசயம் -- வெட்டி வேர். - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Saturday 9 May 2020

இயற்கையின் அதிசயம் -- வெட்டி வேர்.


சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக பிரசித்தி பெற்றது..!
அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிமைத்தோம். அடுத்த சில மாதங்களில் அந்த நீர், நல்ல நீராக மாறிப்போனது" என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்...
வெட்டிவேரை கொண்டு மண் மலடாவதை தடுக்கும் வழிமுறை.!
விளைவிக்கும் காய்கறிகளை இயற்கையாக பெற.!


செலவில்லாத சுத்திகரிப்பு கருவி.!

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த டாக்டர் பால் ட்ரவுங் பேசும்போது , அரங்கமே ஆச்சர்யத்தால் வாயடைத்துப் போனது.

" அறிவியல் என்ற பெயரால் உயிருள்ள நிலத்தில் ரசாயன உப்பை கொட்டினோம். அதன் விளைவு நிலம் வளமிழந்து போய்விட்டது. அதை மீண்டும் சீர்திருத்தி, பழையபடி இயற்கை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்கு இன்றைக்கு நிறையலே கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆனால், இனி நஷ்ட்டப்பட தேவையிருக்காது.

எங்கெல்லாம் ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்ட நிலம் உள்ளதோ, அங்கு வெட்டிவேரினைப் பயிரிட்டால் போதும். மண் பழையபடி உயிர்த்தன்மை மிக்கதாக மாறிவிடும். காரணம், மண்ணிலிருக்கும்  விஷத்தன்மையை முறிக்கும் வல்லமை வெட்டிவேரிடம் இருக்கிறது.

நாகரீகம் என்ற பெயரால் நகரங்கள் முழுக்கச் சாக்கடைகளை உருவாக்கி விட்டோம். தொழிற்சாலைக் கழிவுகளை, குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்படும் ஆறுகளில் கலந்து ஓடச் செய்துவிட்டோம். இதனால் புற்றுநோய், நரம்புக் கோளாறு என்று அதிபயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் நம்மைத் தாக்க ஆரம்பித்துவிட்டன.

ஆஸ்திரேலியாவின் குயின் ஸ்லேண்ட் மாகாணத்தில் இப்படிப்பட்ட கொடுமையான சூழ்நிலை நிலவுகிறது . அங்கு கழிவுநீர் வெளியே செல்லும் பகுதிகளில் வெட்டிவேர்களை வளர்த்தோம். கழிவுநீரில் இருந்த குரோமியம், காட்மியம் போன்ற உயர் உலோகங்கள் எல்லாம் பதினான்கு மாதங்களில் காணாமலே போய்விட்டன. கழிவுநீரானது நல்ல நீராக மாறிவிட்டது.
இத்தகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்து கொடுத்துவிட்டது வெட்டிவேர்...

No comments:

Post a Comment

Post Top Ad