PG TRB HALL TICKET DOWNLOAD REGARDING: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Saturday, 17 June 2017

PG TRB HALL TICKET DOWNLOAD REGARDING:

TRB: தமிழகத்தில் 2.19 லட்சம் பேர் விண்ணப்பம்; போட்டோ இல்லாதவர்களுக்கும் தேர்வெழுத அனுமதி.

தமிழகத்தில் 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள 1663 முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என டிஆர்பி அறிவித்துள்ளது.kaninikkalvi.blogspot.in தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை  மற்றும் இதர துறைகளின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை  ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை  1 பணியிடங்கள் தமிழ்நாடு  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. இதற்கான  அறிவிப்பு கடந்த மே மாதம் 9ம் தேதி வெளியிடப்பட்டது.
இதன் மூலம் தமிழ்  218,  ஆங்கிலம்  231, கணிதம்  180, இயற்பியல்  176, வேதியியல்  168,  தாவரவியல்  87, விலங்கியல்  102, வரலாறு  146, புவியியல்  18,  பொருளியல்  139, வணிகவியல்  125, அரசியல் அறிவியல்  24, உயிர்  வேதியியல், நுண் உயிரியல், தெலுங்கு ஆகிய பாடங்களில் தலா ஒரு காலியிடம், மனையியல்  7, உடற்கல்வி இயக்குநர் நிலை 1  39 என மொத்தம் மொத்தம் 1663  காலியிடங்கள் நிரப்பப் படுகிறது.
இந்த முறை ஆன்லைன் வழியாக மட்டுமே  விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தத் தேர்வு ஜூன் 2ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
Kaninikkalvi.blogspot.in
இந்தத் தேர்வுக்கு 2 லட்சத்து  18 ஆயிரத்து 591 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 2ம் தேதி  நடத்தப்படுகிறது. முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in ) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசி நேரத்தில் பதிவிறக்கம் செய்வதால் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க முன்னதாக ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அனைவரும் தங்களுக்குரிய ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஆர்பி தெரிவித்துள்ளது.

போட்டோ இல்லாதவர்களுக்கும் அனுமதி

முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த ஒரு சிலருக்கு அவர்களின் போட்டோ இல்லாத போதிலும் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போட்டோ இல்லாமல் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஹால் டிக்கெட்டில் ஓட்டி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் அட்டெஸ்டு பெற்று தேர்வு எழுதலாம். தேர்வு எழுதிய பின்னர் அந்த ஹால் டிக்கெட்டையும், ஸ்டாம்ப் சைஸ் அளவு கலர் போட்டோவையும் தவறாமல் தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என டிஆர்பி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad