- HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Saturday, 17 June 2017

16549 PART TIME TEACHERS DEMANDS TO TN GOVT

ஆசிரியர் அவர்களுக்கு பணிவான வணக்கம்.
தமிழக அரசுப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை,தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன், கட்டிடக்கலை போன்ற பாடங்களை ஆறு முதல் எட்டு வரையுள்ள இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு போதித்திட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாதம் ரூ.5000 தொகுப்பூதியத்தில் வாரம் 3 அரைநாட்கள் என மாதத்தில் 12 அரைநாட்களாக பள்ளிக்கு வருகை புரிந்து பணியாற்றும் வகையில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து 2014ல் ஏப்ரல் மாதத்தில் தொகுப்பூதியம் ரூ.2000 உயர்த்தி தற்போது ரூ.7000ஆக வழங்கப்பட்டு வருகிறது.

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநியமனம் செய்த பின்னர் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறைகள் வெளியில் தெரியாதவண்ணம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்களும் ஆர்வமாகவும்,உற்சாகத்துடன் எழுச்சியாக திகழ்ந்து வருகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்களே இதர பாடங்களையும் சூழ்நிலைக்கேற்ப மாணவர்களின் நலன்கருதி போதித்து வருகின்றனர். தேர்வு காலங்களில் ஆசிரியர்கள் இல்லாத சூழலில் பள்ளிகளைகூட திறந்து பணிகளை மேற்கொள்கின்றனர். கலைக்கழக, விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் சிறந்து விளங்க பகுதிநேர ஆசிரியர்களே முக்கிய காரணமாக விளங்குகின்றனர்.

சமீபத்தில் மத்திய அரசின் சிறந்த பாடகருக்கான விருதை தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த பகுதிநேர இசை ஆசிரியர் சுந்தர் அய்யர் பெற்று இருக்கிறார். மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் பதக்கங்களை வெல்லதற்கு பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களே பெருங்காரணமாக இருந்து வருவதை கல்வியாளர்கள் பாரட்டி வருகின்றனர். பள்ளிகளில் அனைத்து கணினி சம்மந்தமான வேலைகளையும் பகுதிநேர கணினி ஆசிரியர்களே செய்து வருகின்றனர்
ஆனால் துறை ரீதியாக சரிவர பரிந்துரை செய்யப்படாததால் இதுவரை பகுதிநேர ஆசிரியர்கள் அரசால் கவனிக்கப்படாமல் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். எனவே ஆசிரியர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களின் நிலையை மாற்றிட, அரசின் கவனத்தை  ‘ஈர்த்திட உதவுமாறு வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு
செல் நம்பர் - 9487257203

No comments:

Post a Comment

Post Top Ad