TODAY RASI PALAN 19.06.2017 - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday, 18 June 2017

TODAY RASI PALAN 19.06.2017

தின பலன்19.06.2017
மேஷம்
அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மதியம் 1. 26 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ரிஷபம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மிதுனம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
  கடகம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
சிம்மம்
மதியம் 1. 26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தல் வேலைச்சுமை ஓரளவு குறையும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கன்னி
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 1. 26 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
துலாம்
கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
விருச்சிகம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்-. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
தனுசு
நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மகரம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வாகன வசதிப் பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கும்பம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அழகு, இளமைக் கூடும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
மீனம்
மதியம் 1. 26 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

No comments:

Post a Comment

Post Top Ad