TET நிபந்தனை ஆசிரியர்களின் அடுத்தகட்ட கூட்டம் நாளை திங்கட்கிழமை மதுரையில் நடைபெறுகிறது. - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday 25 June 2017

TET நிபந்தனை ஆசிரியர்களின் அடுத்தகட்ட கூட்டம் நாளை திங்கட்கிழமை மதுரையில் நடைபெறுகிறது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்று இன்று வரை பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும்,  15/11/2011ம் தேதியிட்ட 181 ஆம் அரசாணையில் உள்ள பாகுபாடு தன்மையை நீக்கம் செய்து புதிய அறிவிப்பு
வெளியீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்துதல் சார்பாக TET நிபந்தனை ஆசிரியர்களின் அடுத்த கட்டக் கூட்டம் மதுரையில் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என அதன் முதன்மை உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர். TET லிருந்து பணியில் உள்ளவர்களுக்கு முழுவதும் விலக்கு என்ற நிலையை நோக்கிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் வரவேற்கப்படுகின்றன.
எதிர்வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து TET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறி ஆகும் சூழலை மாற்ற முறையாக தமிழக அரசின் மேலான கவனத்தில் எடுத்துச் செல்ல இந்த கூட்டம் ஒரு சிறந்த வாய்ப்பு.
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஊதியம் முதல் பதவி உயர்வு வரை பல்வேறுபட்ட சிக்கல்களை சந்தித்து வரும் TET நிபந்தனை ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து தீர்வு காணும் களமாக அமையும் இக்கூட்டம் மதுரையில்  நாளை திங்கட்கிழமை (26/06/2017) காலை சுமார் 10 மணி அளவில் நடைபெறும்.
23/08/2010 மற்றும் 15/11/2011 என்ற பாகுபாடு இல்லாமல் இதுவரை பணிச் சிக்கலில் உள்ள நிபந்தனை ஆசிரியர்கள் அனைவரும் வந்து தீர்வு காண இதுவே ஒரு சரியான தளம்.
இடம்:
Madurai Labour Welfare Association Hr Sec School, Near Head post office, Periyar Bus stand.
தொடர்புக்கு:
9944246797
9443165016
9443949685
9659987323
9443826203

No comments:

Post a Comment

Post Top Ad