ஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்கள் கருத்து - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday 25 June 2017

ஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்கள் கருத்து

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின் வரி விதிப்பு, கணக்கியல் உள்ளிட்ட துறைகளில் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
"ஒரு நாடு ஒரு வரி' என்ற நோக்கத்தில், ஜிஎஸ்டி ஜூலை 1 -ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது. தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வரப்படும் சரக்கு - சேவை வரியின் பயனாக, வரி ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) தெளிவாக இருக்கும்; நாட்டின் பொருளாதார விகிதம் உயரும். சில்லறை வணிகம் முதல் பெரிய அளவிலான வணிகம் வரை அனைத்தும் கணினிமயமாக்கப்படும் இதற்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டி. மேலாண்மை மற்றும் மேம்பாட்டிற்காக ஆட்களை பணியில் அமர்த்த வேண்டியது அவசியம். எனவே, வரித் துறை, கணக்கு மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகிய துறைகளில் உடனடி வேலைவாய்ப்பு உருவாகும் என்று இந்திய பணியாளர் நியமன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முதல் காலாண்டில் ஒரு லட்சம் பேருக்கு உடனடி வேலைவாய்ப்பும், பின்னர், சிறிது காலத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் ஆண்டுதோறும் 10 முதல் 13 சதவீதம் வரை வேலைவாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் இந்திய பணியாளர் நியமன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொருளாதார வல்லுநர் ரிது பர்னாக சக்ரவர்த்தி கூறுகையில், நாட்டின் பொருளாதார விகிதம் உயரும். வழக்கமான வேலைவாய்ப்பு துறையானது 10 முதல் 13 சதவீதம் வரை வளர்ச்சி பெறும். பல்வேறு துறைகளில் வல்லுநர்களின் தேவை அதிகரிக்கும்.
ஜிஎஸ்டியால் பொருட்களின் வாங்குவது விற்பது வேகமாக நடக்கும். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். லாபமும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜிஎஸ்டியால் வேலைவாய்ப்பு துறையில் 10 முதல் 13 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்ப்படுவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad