37 new announcement | Education Minister news: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday 18 June 2017

37 new announcement | Education Minister news:

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றமே..! என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?

சட்டசபையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் குறித்து கல்வியாளர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். "அமைச்சரின் அறிவிப்பில் பள்ளிக்கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய அளவில் ஏதுவும் செய்யவில்லை" என்கிறார் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அமைப்பாளர் பாலசந்தர்.
"மாணவர்களுக்குக் கல்விக்கடன் முகாம்கள், புத்தகக் கண்காட்சிகள், கலைத்திருவிழாக்கள், கிராமப்புற மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சிகள் போன்றவற்றை நடத்த முன்வந்திருப்பதைப் பாராட்டுகிறோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பல அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. 
பல நூறு தொடக்கப் பள்ளிகள் மூடி வரும் நிலையில் 30 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பு பெருத்த ஏமாற்றமே. வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்பது குறித்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் ஆசிரியர்களை நியமித்திட வேண்டும். அதுகுறித்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆரம்பப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை 10,000-க்கும் மேற்பட்ட தேவைப்பணி இடங்களும், 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்களும் இருக்கின்றன. ஆனால் 4,084 காலிப்பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்து இருக்கிறார் அமைச்சர். இதைப்போலவே, 60,000-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்குத் தொடர் நீட்டிப்பு வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் 17,000 பணியிடங்கள் நிரந்தரப்பணியிடங்களாக மாற்றப்படும் என்ற அறிவித்து இருக்கிறார்கள். இது நல்ல விஷயம் என்றாலும், இன்னும் 43,000க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியிடங்களையும் நிரந்தரப்பணியிடங்களாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் செயல்வழிக்கற்றல் அட்டைகளுக்கு 31.82 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இதுவரை அரசால் சமச்சீர் கல்வியைத் தனியார் பள்ளிகளில் அமல்படுத்த முடியவில்லை. இதைப்போலவே, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு வழங்குவது போல் செயல்வழிக்கற்றல் அட்டைகளை சுயநிதிப்பள்ளிகளிலும் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கமுடியவில்லை என்றால் பொதுக்கல்வியைப் பாதுகாக்க முடியாது. 
பகுதி நேரக் கணினி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு கண்டு கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறும் அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்வோம் என்ற அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.  விளையாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் இல்லை.
பென்சன் திட்டம் குறித்த அறிவிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார். பென்சன் திட்டம் குறித்த ஆலோசனை குழு அறிக்கை தயாரித்து ஆலோசனைகளை ஏற்கெனவே வழங்கி விட்டது. இந்த நிலையில் பென்சன் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தோம். அதுவும் வெளியாகவில்லை. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் புதிய பென்சன் திட்டம் முற்றிலும் ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதைப்போலவே, தமிழ்நாட்டிலும் அமுல்படுத்துவார்கள் என்ற அறிவிப்பு எதிர்நோக்கி இருந்த ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 
ஊதியக்குழு கால தாமதம் ஆவதைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதுவும் அறிவிக்கப்படவில்லை. மாணவர்களின் நலனில் அக்கறை காட்டிய அமைச்சர் ஆசிரியர்களின் நலன்கள் மீதும் அக்கறை காட்டி அறிவிப்புகள் வெளியிட்டு இருந்தால் பலத்த கரவேஷங்களோடு வரவேற்பு இருப்போம்" என்கிறார் பாலசந்தர்

1 comment:

  1. sir.., why not add the computer science subject in Govt. 6 to 10 ???

    ReplyDelete

Post Top Ad