Hands, feet and a simple process to go wrinkles: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday 2 February 2017

Hands, feet and a simple process to go wrinkles:

கை, கால்களில் உள்ள சுருக்கங்களை போக்கும் எளிய வழிமுறை
முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கை, கால் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இப்போது கை, கால் சுருக்கங்களை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். 
அழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை கை, கால்களும் தான் உள்ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும். எனவே முகத்திற்கு எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவில் கை, கால்களுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இங்கே கையில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் சிறந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,
உருளைக்கிழங்கில் உள்ள அமிலம், சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிப்பதோடு, சரும சுருக்கங்களையும் போக்கும். மேலும் உருளைக்கிழங்கு சருமத்தை மென்மையாக்கும்.
உருளைக்கிழங்கை வேக அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஒயில், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 2-3 முறை கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்பு கடலை போட்டு கழுவ வேண்டும்.
சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை முட்டை மேம்படுத்தும். இது சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. முட்டையின் வெள்ளைக்கருவுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad