Everything You Need To Know Before You Buy a TV |Kalvikural.com - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday, 19 October 2016

Everything You Need To Know Before You Buy a TV |Kalvikural.com

புதிதாக Tv_வாங்க_போரிங்களா பாஸ் ஒரு ஐந்து_நிமிடம் எனது கற்றதும்பெற்றதை படித்து_விட்டு முடிவெடுக்கவும்.

கடந்த நான்காண்டுகளாக எனது வீட்டில் 19" டோஷிபா Icd டீவி பயன்படுத்தி வருகிறேன். இரண்டாண்டுகளுக்கு முன்பு ரிமோட் முற்றிலும் பழுதாகி புதிய ஒன்றை பெற சேவை மய்யத்தை தொடர்பு கொண்ட போது ₹ 1,000 செலுத்தி விட்டு சென்றால் ஒரு மாதம் கழித்து பெற்று செல்லலாம் என்றார்கள். பிறகு நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி பர்மா பஜாரில் ₹ 100 விலையில் வாங்கிய ரிமோட் இன்றும் சிறப்பாக வேலை செய்கிறது.மீண்டும் கடந்த ஆறேழு மாதமாக அவ்வப்போது தகராறு செய்து கொண்டே இருக்கிறது காட்சி அமைப்பும் பல நேரம் மிகுந்த புள்ளிகளாக சில நேரம் குறுக்கு நெடுக்கான கோட்டுடன் தெரிகிறது.
இப்பொழுதுள்ள பழுதை நீக்க சேவை மய்யத்தை விட்டால் வேறு வழியில்லை என்பதால் அவர்களை மீண்டும் அணுகினேன் ஒரு வார தொடர் முயற்சிக்கு பிறகு வீட்டிற்கு வந்து சோதித்து விட்டு சில பாகங்களை மாற்றியாக வேண்டும் அதற்கு சுமார் ₹6,500 வரை செலவாகும் என்றார். இந்த தொ காட்சியை நான்காண்டுகளுக்கு முன்பு வாங்கியது ₹8,500 தான் அதில் 14.5% வரி மற்றும் சில்லறை விற்பனை அங்காடியின் 10%  லாபத்தை நீக்கி பார்த்தால் டீவியின் உண்மையான விலையே ₹ 6,500 தான் இருக்கும். வருகை புரிந்த சர்வீஸ் இன்ஜினியர்க்கு கட்டணமாக ₹350 செலுத்தி விட்டு பழுதை சரி செய்யும் திட்டத்தை கைவிட்டு டீவி இல்லாமல் வாழ முடியாத இந்த பாழும் உலகத்தை திட்டி கொண்டே புதிய டீவியை வாங்க ஆயத்தமானேன்.
இந்த முறை வாங்குவதற்கு முன்பு நிதானமாக ஒன்றுக்கு பத்தாக விசாரித்து சரியானதை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் என களத்தில் இறங்கி விசாரித்தால் தலைசுற்றல் முடிவுகளாக வந்தது. ஒரு வாடிக்கையாளர் சிறந்த பிராண்ட் என பரிந்துரை செய்வதை மற்றொரு வாடிக்கையாளர் அதே பிராண்ட்டினால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்கிறார். பயன்படுத்துபவர்களை கொண்டு முடிவெடுக்க வேண்டாம் ஓரளவு தொழில்நுட்ப அறிவுள்ளவர்களை கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்கலாம் என எண்ணி எமது பகுதியின் கேபிள் ஆப்ரேட்டரை அணுகினேன் காரணம் நமது தொ காட்சியில் ஏற்படும் பழுதிற்கு நாம் முதலில் தொடர்பு கொள்வது இவர்களை தான். கேபிள் ஆப்பரேட்டர் கூறிய ஆலோசனையை கேட்டால் தலைசுற்றலுக்கு மாறாக மாரடைப்பே வந்து விட்டது. ஆம் அவர் எடுத்த எடுப்பிலே இன்னும் ஒரு வருடத்திற்கு டீவி வாங்கும் திட்டத்தை கிடப்பில் போடுங்கள் என்றார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் மற்றும் விவாதத்தின் முடிவுகளை எளிய நடையில் பட்டியலிடுகிறேன்.
1) 8,000 முதல் 1,50,000 வரை விற்பனையாகும் எந்த ஒரு பிராண்ட் டீவியாக இருந்தாலும் முதலில் அதை எதிர்மறை சிந்தனையில் புகார்களை கூகுள் செய்து பாருங்கள். எ கா XYZ Brand led tv consumer complaints என கூகுள் செய்வும். நான் short list செய்து வைத்திருந்த நான்கு முன்னணி பிராண்டும் இதில் தவிடு பொடியானது.

2) அந்த காலத்து Solidaire Tvஐ போல கால் நூற்றாண்டு உழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சந்தையிலுள்ள எந்த டீவி நிறுவனமும் திட்டமிடுவதில்லை மாறாக இரண்டு ஆண்டு பயன்படுத்து தூக்கி எறி புதிய மாடல் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகும் அதை வாங்கி கொள் என்ற நுகர்வு போதையில் நம்மை ஆழ்த்தும் வேலையை கச்சிதமாக செய்கிறது.
 மேலும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் சொந்தமாக தொழிற்சாலை எதுவும் கிடையாது மாறாக அனைத்து நிறுவனங்களும் சீனாவில் தயாரித்து தத்தமது பிராண்டில் விற்பனை மட்டுமே செய்கிறது.
 இதில் விலை மிகக்குறைவாக கிடைக்கும் பிராண்டை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம். எதிர்காலத்தில் பெரிய செலவு பிடிக்கும் பழுது ஏற்பட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிதாக வாங்கிக்கொள்ளலாம். 5 ஆண்டு வாரண்டி 8 ஆண்டு வாரண்டி என்பதெல்லாம் பேக்கிங்கை பிரிக்காமல் அப்படியே வைத்து சாம்பிராணி காட்டினால் மட்டுமே சாத்தியம் மற்றபடி நமக்கு புரியாத டெக்னிக்கல் வார்த்தையை கூறி வாயடைத்து விடுவார்கள்.

3) ஷோரூமில் நாம் புதிய Lcd மற்றும் Led டீவி வாங்கும் பொழுது விற்பனை பிரதிநிதி சிறந்த காட்சியமைவிற்கு அரசு கேபிளை துண்டித்து விட்டு டிஷ் இணைப்பை பரிந்துரை செய்வார் அல்லது எதாவது ஒரு DTHஐ இலவசமாக அளிப்பார். நாமும் அதையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு டிஷ் டீவிக்கு மாறி விடுவோம். தற்போதுள்ள தொழில்நுட்ப ஓப்பீட்டில் சிறந்த Picture qualityக்கு டிஷ் இணைப்பு சரியானது தான் ஆனால் அதில் Basic package ல் சன், ஜெயா, விஜய் டீவி நீங்கலாக நாம் காண விரும்பாத நூற்றிற்கும் மேற்பட்ட வட மொழி சேனல்களே நம் தலையில் கட்டப்படுகிறது. அதில் இல்லாத எதாவது ஒரு சேனலை பார்க்க விரும்பினால் அந்த குறிப்பிட்ட சேனலுடன் வேறு பல காண விரும்பாத சேனலையும் சேர்ந்து Movie pack, sports pack, combo pack, Rambo pack என்ற பெயரில் நம் தலையில் கட்டி விடுவார்கள். இவ்வாறு பல Package, combo எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் மாதம் ₹600 முதல் ₹900 வரை செலவிட வேண்டியிருக்கும். ஆனால் நாம் நமது கேபிள் ஆப்பரேட்டருக்கு செலுத்தும் 100ஐ பலமுறை அலைய விட்டு தருவோம் அது வேறு கதை.

4) தற்போதைய கேபிள் தொழில்நுட்பம் அனைத்தும் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவிற்கு வருகிறது. மத்திய அரசு உத்தரவின் படி 01/01/2017 முதல் கட்டாயமாக செட்டாப் பாக்ஸ் பொருத்தியாக வேண்டும். இதுவரை பல பெரு நகரங்களில் செட்டாப் பாக்ஸ் புழக்கத்தில் இருந்தாலும் அடுத்த ஆண்டு வர இருக்கும் செட்டாப் பாக்ஸ் பழைய தொழில்நுட்பத்திலுள்ள குறைபாடுகளை நீக்கி அதிநுட்பம் வாய்ந்ததாக வரவுள்ளது. தற்போதுள்ள பழைய கேபிளை நீக்கிவிட்டு Optic fibre cableல் இணைப்பு வரும்பட்சத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேனல்களை HD துல்லியத்தில் காண இயலும். மேலும் நாம் காண விரும்பும் குறிப்பிட்ட சேனலுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். விளம்பர வருவாய் மட்டும் போதும்  என முடிவெடுக்கும் சேனல்கள் நமக்கு இலவசமாகவே காண கிடைக்கும்.

5)   "இதை மிக கவனமாக " வாசிக்கவும்.
தற்போது விற்பனையில் இருக்கும் டீவிக்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரவிருக்கும் அதிநவீன செட்டாப் பாக்ஸ் தொழில்நுட்பத்தை முழுமையாக சப்போர்ட் செய்யுமா என்றால் இல்லை அல்லது சரியாக யாருக்கும் தெரியவில்லை என்பதே உண்மை. Andriod osல் Kitkat marshmallow போன்றது தான் இதுவும். இதைப்பற்றி எந்த டீவி பிராண்ட் உரிமையாளரும் வாய் திறக்க மாட்டார்கள் காரணம் விற்பனைக்கு தயாராக இருக்கும் பல கோடி டீவிக்களை உப்பு தடவி பதப்படுத்த முடியாதல்லவா. சில்லறை விற்பனையாளருக்கு இதை பற்றி முழுமையாக எதுவும் தெரியாது.
 எமது கேபிள் ஆப்பரேட்டரின் திடமான ஆலோசனை அடுத்த April may மாதத்தில் புதிய தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் மாடலை Short list செய்து அதில் விருப்பமானதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என்பதே.

எச்சரிக்கை :- டீவி வாங்கும் யோசனையில் இருக்கும் எனதருமை ஏழை நடுத்தர வர்க்க அன்பர்களே ஒரு ஆறு மாத காலம் பொறுத்து வாங்குவதால் நட்டம் ஒன்றும் இல்லை. ஆனால் தற்போது வாங்கும் டீவி புதிய தொழில்நுட்பத்தில் பயன்படாமல் போனால் அதற்கு செலவிட்ட தொகை 20,000மோ 40,000மோ வீட்டு வாடகை, கல்வி செலவு என பல தேவைகளுக்கு பயன்பட கூடியது என்பதை மறவாதீ்ர்.  தீபாவளி ஆபர் என்ற பெயரில் கிடைக்கும் 100ரூ பெறாத பிளாஸ்கை கண்டு மயங்கி விட வேண்டாம்.
 சிந்திப்பீர் முடிவெடுப்பீர்.

இதை ஷோ் செய்து பரப்பவும்.

No comments:

Post a comment

Post Top Ad