Green Tea Health Benefits | Kalvikural.com - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 28 September 2016

Green Tea Health Benefits | Kalvikural.com

கிரீன் டீ ஏன் குடிக்க வேண்டும்???
முதன்முதலில் சீனாவில்தான் கிரீன் டீ பழக்கம் தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள். அங்கிருந்து படிப்படியாக மற்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது. கடந்த 2 ஆண்டுகளில்தான் இந்தியாவில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடல்நலம் குறித்த அக்கறையும், கிரீன் டீக்கு பெரியளவில் செய்யப்படும் விளம்பரங்களும்தான் முக்கியக் காரணம்.
கிரீன் டீ ‘ஆன்டிஆக்சிடென்ட்’ ஆகச் செயல்படுகிறது. உடலில் உள்ள ‘ஃப்ரீ ரேடிகல்ஸ்’ எனப்படும் நச்சுப்பொருட்கள் செல்களைப் பாதிக்காமல் தடுக்கிறது. ஃப்ரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் தங்கிவிடும். இதனால் பருமன் ஏற்படும். போதுமான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் முறையாக நடந்து, உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இதனால், உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் தடுக்கவும் கிரீன் டீ உதவுகிறது.கொழுப்புகளைக் கரைத்து பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும்தன்மையும் கிரீன் டீக்கு உண்டு. இதனால்தான் எடை அதிகமுள்ளவர்களுக்கு கிரீன் டீ குடிக்கச் சொல்லி அறிவுறுத்துகிறோம். எடை குறைவானவர்களும் கிரீன் டீ அருந்தலாம். பொதுவாக, 12 வயதுக்குமேல் உள்ளவர்கள் கிரீன் டீ குடிக்கலாம். உடலை எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் பழங்கள், பச்சைக்காய்கறிகள் போன்றவற்றிலும் இருக்கிறது என்பதால் சமச்சீர் உணவு அவசியம்.(இது போன்ற பதிவினை மக்கள் நலன் கருதி வெளியிடுவதில் கல்விக்குரல் வலைதளம் பெருமையடைகிறது )
வைட்டமின் சி, வைட்டமின் இ ஆகிய சத்துகளும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகளாக செயல்படக்கூடியவை. வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்கள், வைட்டமின் இ அதிகமுள்ள பாதாம் பருப்பு, சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது நலம்தரும்.
கிரீன் டீக்கு நீரிழிவை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களும் நீரிழிவு வருவதற்கு முந்தையநிலையில் உள்ளவர்களும் கிரீன் டீ அருந்தி பயன்பெறலாம். வயதாகும்போது தோலில் ஏற்படும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும் வேலையையும் கிரீன் டீ செய்கிறது. இப்படி ஆன்டி ஏஜிங் காரணியாக விளங்குவதால், அழகு சாதனப் பொருட்கள் பலவற்றில் மூலப்பொருளாக கிரீன் டீ சேர்க்கப்படுகிறது.
கிரீன் டீ பைகளை சுடுநீரில் மூழ்கச் செய்து, அதில் கிடைக்கும் இயற்கையான டீயைக் குடிப்பதே நல்லது. அதிகபட்சம் 3 வினாடிகளுக்குமேல் டீ பைகளை நீரில் மூழ்கச்செய்யக் கூடாது. சிலர் கிரீன் டீயில் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிப்பார்கள். இதனால் கிரீன் டீ உடலை ‘டீடாக்ஸ்’ செய்து நச்சுகளை வெளியேற்றும்தன்மையை இழந்துவிடும். எதுவும் கலக்காமல் லேசான துவர்ப்புத் தன்மையுடன் கூடிய கிரீன் டீ குடிப்பதே நல்லது. இருப்பினும், சிறிய துண்டு எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம். இது, நச்சுகளை வெளியேற்றும்தன்மையை அதிகப்படுத்தும். எதுவும் கலக்காமல் லேசான துவர்ப்புத்தன்மையுடன் கூடிய கிரீன் டீ குடிப்பதே நல்லது அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம்.


No comments:

Post a Comment

Post Top Ad