அங்கன்வாடி மையத்தில் பாம்பு கடித்ததில் சிறுமி செவ்வாய்க்கிழமை இறந்தார்.கடலூர்
மாவட்டம், காரணப்பட்டு பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பாலமுருகன்
(27). இவரது மனைவி தெய்வநாயகி. இவர்கள் தங்களது மகள் பாலஸ்ரீயை (4), அதே
பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் செவ்வாய்க்கிழமை விட்டுச் சென்றனர்.
மதிய உணவு சாப்பிட்ட பிறகு, பாலஸ்ரீ மையத்தின் அருகே விளையாடிக்
கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை பரிசோதித்தபோது, ஏதோ கடித்ததாக
சிறுமி கூறியுள்ளார். அப்போது, அங்கு பாம்பு ஒன்று சென்றதாகத் தெரிகிறது. இதையடுத்து
சிறுமியை புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்ன்ர், மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனனின்றி பாலஸ்ரீ இறந்தார்.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.Tuesday, 2 June 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment