விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு : ஜூன் 3வது வாரத்தில் பி.எட். தேர்வு முடிவு: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

Saturday, 6 June 2015

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு : ஜூன் 3வது வாரத்தில் பி.எட். தேர்வு முடிவு:

தமிழகத்தில் பிஎட் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததால், ஜூன் 3வது வாரத்தில் பிஎட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 670பிஎட் கல்லூரிகள் செயல்படுகின்றன. பிஎட் தேர்வுகள் கடந்த மே 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடந்தது. 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த மே 25ம் தேதி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 இடங்களில் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் கணினியில் பதிவு செய்யும் பணி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் முடிவடையும் என தெரிகிறது. எனவே பிஎட் தேர்வு முடிவுகள் ஜூன் 3வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad