கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் உடலில் என்ன பக்கவிளைவுகள் வருமென தெரியுமா? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday 20 June 2021

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் உடலில் என்ன பக்கவிளைவுகள் வருமென தெரியுமா?

மனிதர்கள் எல்லாருக்குமே கால் மேல கால் போட்டு உட்காரக் கூடிய ஒரு பழக்கம் இருக்கிறது. அந்த காலத்துல வீட்டில் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போடக்கூடாது என்று சொல்வார்கள்.

அப்படி செஞ்சா அதட்டுவாங்க, பல நேரத்துல இது மரியாதை குறைவான நடத்தை அப்படினு சொல்லுவாங்க. ஆனால் இன்று இது ஒரு சாதாரண பழக்கமாக மாறிவிட்டது.

இப்படி கால் மேலே கால் போட்டு உட்கார்வதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி பார்ப்போம்

பொதுவாகவே ஆண்களை விட பெண்களுக்கு தான் கால் மேல் கால் போட்டுக்கொள்ளும் பழக்கம் நிறைய உள்ளது. தற்போது இது பெண்களின் உடல் மொழியாகவே மாறி வருகிறது என்றும் கூறலாம்.

👉ஒரு மணி நேரத்திற்கு மேல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருந்தால் பக்கவாதம் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதே போல் கால்களை Cross ஆக போட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தாலும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

👉இப்படி கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் என்ன ஆகும் அப்படிங்கரத கண்டுபிடிக்க 2010ஆம் ஆண்டு ஒரு ஆய்வு நடந்தது, அந்த ஆய்வின் இறுதியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தால் உடலில் ரத்த அழுத்தம் அதிகம் ஆகும் எனவும் தெரிவித்தனர்.
அது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட வியாதிகளும் வரும்னு மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

👉உடல் முழுதும் ஓடும் ரத்தம் ஓட்டத்தை சீராக வைக்காது எனவும் கூறுகிறார்கள். இப்படி கால் மேல் கால் போட்டு அமர்வதால மேல் உடலிற்கு மட்டும் ரத்த ஓட்டம் அதிகமாகி இதயத்திற்கு அதிக ரத்தத்தை அனுப்புகின்றது. இதுவே ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது.

👉இப்படி கால் மேல் கால் போட்டு அமர்வதால் கழுத்து வலி, இடுப்பு வலி, அசௌகரியமான நிலை என அனைத்தும் ஏற்படும்
கால் மேல் கால் போட்டு உட்காருவதினால் இடுப்பு எலும்புகளில் உள்ள நரம்புகள் சுருங்கும்.

👉கால் மேல் கால் போட்டு உட்காருவதினால் கர்பப்பையில் பாதிப்பு ஏற்படும்.
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொண்டு இனிமேல் கால் மேல் கால் போட்டு அமர்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது

No comments:

Post a Comment

Post Top Ad