டீ அதிக அளவு எடுத்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள்...? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday 21 May 2021

டீ அதிக அளவு எடுத்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள்...?

ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி   ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் பருகுவது டீ என்பது குறிப்பிடத்தக்கது. டீ குடிப்பது மக்கள்  பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.
 
அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு  டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு கூட செல்கின்றனர்.
 
அதிக அளவில் டீ குடிப்பதால், அதில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான நச்சுக்களால் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, உறக்கம் கெடுதல், நிலையில்லாத ஒரு தன்மை உருவாகி மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும்.

டீ அதிக அளவில் குடித்தால் அதிலுள்ள டானிஸ் வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
 
புற்றுநோய்க்கு மிக முக்கியமாக தரப்படும் கீமோ தெரபி நாம் கொடுக்கும்போது சிகிச்சை பலன் தராது. காரணம் அதிக அளவில் டீ குடிப்பதால், ஹீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாதவாறு தடுத்து நிறுத்துகிறது.
 
எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீ தான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீ குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள்   மருத்துவ நிபுணர்கள்.
 
புராஸ்டேட் புற்று நோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில  மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. டீ-யில் டோனிக் அமிலம் உள்ளது. இது உடலில் இரும்புசத்து கிரகித்துக்கொள்வதை தடுத்து அனீமியாவை  உண்டாக்க காரணமாகிறது

No comments:

Post a Comment

Post Top Ad