உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் வெண்டைக்காய் : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Saturday 22 May 2021

உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் வெண்டைக்காய் :

உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் வெண்டைக்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகள் அதிக சத்துக்களை தரக்கூடியவை. அவ்வாறு காய்கறிகளில் மிக அதிக சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. வெண்டைக்காய் அழகுக்கும் ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

இதனை சாப்பிட்டால் தம்பதியினருக்கு இடையே உறவில் நாட்டம் ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சி தரவும் தோல் வறட்சியை நீக்கவும், உடம்பை பளபளப்பாக மாற்றவும் அருமருந்தாக இது திகழ்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதய நோய் வருவதற்கான ஆபத்தை குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வந்தால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

இது உடலை குளுமையாக வைத்துக் கொள்ளும். வெண்டைக்காய் நீரை பருகுவதால் எலும்புகள் வலுவடையும். மூளை சுறுசுறுப்பாக இருக்க இது மிகவும் உதவும். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காயை அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல்திறன் அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்க முடியும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. தங்களின் கர்ப்ப காலத்தில் வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இதனையடுத்து புற்றுநோய் நமது உடலில் உண்டாகும் புற்றுநோய் செல்கள் மீண்டும் மீண்டும் வளரக்கூடியவை. அந்த செல்களை அழித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வெண்டைக்காயை உதவுகிறது. புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வெண்டைக்காய் மிகவும் உதவுகிறது. கல்லீரல் அதிக அளவு நச்சுக்கள் சேர்வதாலும் அதீத சுழற்சியினாலும் சிலருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.

இந்தப் பிரச்சனையை சரி செய்வதில் வெண்டைக்காய் சிறந்து செயல்படுகிறது. இதனை தினமும் உணவில் போது சேர்த்துக் கொண்டால் கல்லீரல் நன்கு செயல்படும். மேலும் கல்லீரல் சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வராது. இது போன்று உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு வெண்டைக்காய் அருமருந்தாக அமைகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad