வைட்டமின், இரும்புச்சத்துக்கள் நிறைந்த சீத்தாப்பழம் : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Saturday 31 October 2020

வைட்டமின், இரும்புச்சத்துக்கள் நிறைந்த சீத்தாப்பழம் :

 

வைட்டமின், இரும்புச்சத்துக்கள் நிறைந்த சீத்தாப்பழம்
சீத்தாப்பழம்
சீத்தாப்பழம் சிறிய வகை மரமாக வளரக்கூடியது. தண்டுகள் மூலமும் விதைகள் மூலமும் எங்கும் எளிதில் வளரும் தன்மை உடையது. அதன் 10 நன்மைகள் இதோ...

சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அதிகமாக உள்ளன. இது அதிக அளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.

சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள்:

1. இதய நோய் வராமல் தடுக்கும்.

2. நினைவாற்றலை அதிகரிக்கும்.

3. ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கும். மற்ற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.

4. உடல் எடையைக் குறைக்கும்.

5. கோடை காலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை உடையது.

6. உடல் உள்உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது.

7. ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.

8. சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

9. உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்தசோகை நோயை போக்கும். அதுமட்டுமின்றி உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை தரும்.

10. உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சை பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக பருகி வரலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad