
காலையில் ராஜா போல் சாப்பிட வேண்டும், மதியம் மற்றும் இரவு கம்மியாக உண்ணுவதே உடல் நலத்திற்கு நல்லது என கேட்டு வளர்ந்திருப்போம். மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும். அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அடைய செய்யும் என பலர் நம்மிடம் கூறி இருப்பார்கள். பல ஆய்வுகள் இரவில் அதிகம் உண்டால் கெட்ட கொழுப்பு உடலில் அதிகரித்து, உடம்பு குண்டாக வழிவகுக்கும். அதனால் இரவில் விருந்து உண்ணுபவர்களாக இருந்தால் இப்பொழுதே நிறுத்தி விடுங்கள்.
Listen to the latest songs, only on JioSaavn.com

மேலும்
ஆரோக்கியமான நலனுக்கு இரவு படுக்கைக்கு முன்னும் உங்கள் இரவு உணவுக்கு
பின்னும் குறைந்தது 3 மணி நேர இடைவெளி வேண்டும் என்கிறார் நியூடிரிசியன்
ஷில்பா அரோரா. இதற்கான காரணம் இரவில் நாம் தூங்கி விடுவதால் மெட்டபாலிசம்
வேலை செய்யாமல் நின்று விடும். அதனால் உணவு சரியாக ஜீரணிக்காமல் உடலில்
தங்கி உடலை பருமனாக்கி விடும்.
அதனால் படுக்கைக்கு 3 மணிநேரம் முன்பு சாப்பிடுங்கள் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அதனால் படுக்கைக்கு 3 மணிநேரம் முன்பு சாப்பிடுங்கள் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
No comments:
Post a Comment