பொறியியல் கலந்தாய்வு எப்போது? அமைச்சர் அன்பழகன் விளக்கம்: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Saturday, 11 July 2020

பொறியியல் கலந்தாய்வு எப்போது? அமைச்சர் அன்பழகன் விளக்கம்:

 
பொறியியல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் குணமடைந்து வருவதாக அமைச்சர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை நிர்வாகம் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வு மற்றும் தன் உடல்நிலை குறித்து அமைச்சர் அன்பழகன் தொலைபேசி வாயிலாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் கூறியதாவது:
என் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற உடல்நலக் குறைபாடுகள் கிடையாது. தற்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் ஓய்வு எடுத்துவருகிறேன். பொறியியல் கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப் பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயார்நி்லையில் உள்ளன. அதற்கான அறிவிப்புகளை ஜூலை 15-ம் தேதியன்று நேரடியாக வந்து வெளியிட இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a comment

Post Top Ad