ஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள் - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Saturday 11 July 2020

ஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்




ஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்


ஷாம்பு
பாட்டில் பாட்டிலாக நிறைய பேர் ஷாம்பு வகைகளை வாங்கிவைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தவேண்டும்? எந்த அளவில் பயன்படுத்தவேண்டும்? என்பது அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை. அது தொடர்பான சந்தேகங்களுக்கான விடை!

உணவு: கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஷாம்பு பயன்படுத்தினால் மட்டும் போதாது. சமச்சீரான சத்துணவுகளையும் சாப்பிடவேண்டும். முட்டை, ஈரல், காளான், காலிபிளவர், சோயா பீன்ஸ், நேந்திரம் பழம், கோதுமை ரொட்டி, பயறு, பருப்புவகைகளை உணவில் தினமும் சேர்க்கவேண்டும். நிறைய தண்ணீர் பருகவேண்டும். மனஅமைதியோடு தினமும் 8 மணிநேரம் தூங்குவதும் அவசியம்.

தினமும்: எண்ணெய்தன்மையுள்ள கூந்தலை கொண்டவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள், தூசு நிறைந்த பகுதிகளில் வேலைபார்ப்பவர்கள் போன்றோர் தினமும் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்யலாம். ஹேர் ஸ்பிரே, ஹேர் ஜெல் பயன்படுத்துகிறவர்களும் தினமும் ஷாம்பு பயன்படுத்தலாம்.

பாதிப்பு எதுவுமற்ற இயல்பான கூந்தலை கொண்டவர்களும், முடி துண்டுதுண்டாக உடையும் தொந்தரவு கொண்டவர்களும், தினமும் ஷாம்பு போடவேண்டியதில்லை. முடியில் கலரிங் செய்திருப்பவர்களும், முடியை சுருட்டி விட்டிருப்பவர்களும் தினமும் ஷாம்பு போடவேண்டாம்.

சரியான தேர்வு: ஒவ்வொருவரும் தங்கள் முடியின் தன்மையை உணர்ந்து அதற்கு தகுந்த ஷாம்புவை தேர்ந்தெடுக்கவேண்டும். கெட்டியான முடியை கொண்டவர்கள் மோய்ஸ்ச ரைசர் சேர்த்த ஷாம்புவை பயன்படுத்தலாம்.

எண்ணெய்தன்மை உள்ள கூந்தல் என்றால் கிரீம் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. வீரியம் குறைந்த ஸ்பிரே கண்டிஷனர் அவர்களுக்கு சிறந்தது. வறண்ட ஆரோக்கியமான கூந்தலை கொண்டவர்கள் அல்ட்ரா மோய்ஸ்சரைசர் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். இவர்கள் இடைவெளிவிட்டு கண்டிஷனர் பயன்படுத்தினால் கூந்தல் ஜொலிக்கும்.

பயன்படுத்தும் முறை : முடியை தண்ணீரில் நனைத்த பின்பே ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். எவ்வளவு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பது அவரவர் கூந்தலின் நீளம் மற்றும் அடர்த்திக்கு தகுந்தபடி மாறும். ஷாம்புவை தலையில் தேய்ப்பதற்கு உள்ளங்கை மற்றும் நகத்தை பயன்படுத்தக்கூடாது. விரல் நுனியால் மென்மையாக மசாஜ் செய்து கூந்தலோடு பற்றிப்பிடிக்கச் செய்யவேண்டும். தலையின் குறிப்பிட்ட பகுதியிலே எப்போதும் ஷாம்புவை வைத்து தேய்த்தால் அந்த பகுதி முடி விரைவாக வறண்டுவிடும். அந்த இடத்தில் முடி அதிகமாக உதிரவும் செய்யும். கழுத்தின் பின்பகுதியில் இருந்து மேல் நோக்கி ஷாம்புவை தேய்ப்பது சரியான முறையாகும்.

நேரம்: பொதுவாக ஒன்றரை நிமிடம் ஷாம்பு தலையில் இருந்தால் போதுமானது. அழகு சிகிச்சை அளிப்பவர்கள் குறிப்பிட்டு சொன்னால் மட்டுமே ஷாம்பு பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்கவேண்டும். ஒருமுறை குளிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஷாம்பு போடக்கூடாது. குளிக்கும்போது நன்றாக முடியை அலசி, ஷாம்புவின் தன்மையை முழுமையாக நீக்கிவிடவேண்டும். ஷாம்பு போடுவதால் வறண்டு போகும் கூந்தலுக்கு ஈரத்தன்மை மற்றும் ஜொலிஜொலிப்பை கண்டிஷனர் தருகிறது. பொடுகு தொந்தரவு இருப்பவர்கள் பேபி ஷாம்பு அல்லது மெடிகேட்டட் ஷாம்பு பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad