இணையவழிக் கல்விக்காக ஆண்டுதோறும் தலா ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு : தமிழக அரசு 5.5 lakh per annum for e-learning: Government of Tamil Nadu - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad
Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday, 21 July 2020

இணையவழிக் கல்விக்காக ஆண்டுதோறும் தலா ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு : தமிழக அரசு 5.5 lakh per annum for e-learning: Government of Tamil Nadu

images%2528166%2529

நாடு முழுவதும் குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு என்ற விவரத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. குழந்தைகள் காப்பகங்களை பராமரிக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி பெரும் கவலையை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொற்று மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்ததோடு, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது,  நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு சார்பில் கொடுக்கப்படும் நிதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் குழந்தைகள் காப்பகங்களைப் பராமரிப்பது தொடர்பான முக்கிய தகவல்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது பதிலளித்த தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர் , “தமிழகத்தில் உள்ள அனைத்துக் காப்பகங்களிலும் டிவி வசதி உள்ளது. ஒவ்வொரு காப்பகத்துக்கும் ஆண்டுதோறும் 5.5 லட்ச ரூபாய் வீதம் மாநில அரசால் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நிதி என்பது ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் சேவை, இணையவழிக் கல்விக்கானது எனத் தெரிவித்தார்.பின்னர் வழக்கு ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad