இளமை தோற்றம் தரும் பலாப்பழம்: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday, 19 May 2021

இளமை தோற்றம் தரும் பலாப்பழம்:

இளமை தோற்றம் தரும் பலாப்பழம்
பலாப்பழம்
பழங்களில் மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகள். இதில் தமிழககேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளை பூர்வீகமாக கொண்ட “பலாப்பழம்“ சாப்பிடுவதால் பலவித நன்மைகள் ஏற்படுகின்றன. கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை வைட்டமின் “ஏ” சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. பலாப்பழம் சாப்பிடுவதால் கண்பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். தைராய்டு என்பது நமது தொண்டையில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு செம்பு சத்து அதிகம் நிறைந்த பலாப்பழத்தை சாப்பிடலாம்.

குழந்தைகள், பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள் ஆகியோர் பலாப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைகி றது.

நமது உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளையணுக் களின் உற்பத்தி குறைவால் ரத்த சோகை நோய் அல்லது குறைபாடு ஏற்படுகிறது. பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் மக்னீசியம், பாந்தோதீனிக் அமிலம், செம்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இவை அனைத்தும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சோகை குறைபாட்டை போக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.பலாப்பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். பலாப்பழ கொட்டைகளை பாலில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு அதை நன்கு அரைத்து, முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கங்கள் நீங்கும். இதை தொடர்ந்து 6 வாரங்களுக்கு மேல் செய்து வந்தால் சிறப்பான பலன் உண்டு.

பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது. இதனால் ‘ஆஸ்டியோபொராசிஸ்’ என்று அழைக்கப்படும் எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது. 30 வயதை கடந்தாலே அனைவரும் தங்களின் ரத்த அழுத்த நிலை குறித்த தகவல்களை அறிந்திருப்பது அவசியமாகும். பலாப்பழம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் சோடியம் உப்பின் அளவு சரியான அளவில் இருந்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தம் அதிகம் ஆகும் போது வரும் இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது. தலையில் முடி உதிர்வதையும் பலாப்பழத்தில் இருந்து வைட்டமின் “ஏ“ சத்து குணப்படுத்துகிறது.

இயற்கை கொடுத்த பலாப்பழத்தை உண்டு பயன்பெறுவோம்.

No comments:

Post a Comment

Post Top Ad