
டூவீலர் ஓட்டும் பெண்
எப்போதுமே டூவீலர் எடுத்தோமா,
ஓட்டினோமா என்றில்லாமல் டூவீலர் ஓட்டும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில்
கொள்ளவேண்டும். டூவீலரை ஸ்டார்ட் செய்யுமுன் ப்ரேக், பெட்ரோல், க்ளட்ச்,
டயர் அனைத்தையும் செக் செய்யுங்கள்.
எப்போதும் முழுமையாக கவர் செய்யும் ஹெல்மெட்டுகளை அணியுங்கள். அழகுக்காக,
முகத்தை மட்டும் மூடும் ஹெல்மெட், துணியால் முகத்தை மூடிக்கொள்வது
போன்றவற்றை முற்றிலும் தவிருங்கள்.
வண்டிப்பெட்டியில் எப்போதும் இருக்க வேண்டியவை: ட்ரைவிங் லைசன்ஸ், வண்டி
ஆர்.சி புக், இன்சூரன்ஸ் அனைத்தின் ஜெராக்ஸ் காப்பி, உங்களுக்குத் தெரிந்த
மெக்கானிக்கின் ஃபோன் நம்பர், ரெயின்கோட், பழையதுணி.
ட்ராஃபிக் ரூல்ஸை தவறாமல் கடைபிடியுங்கள், வளைவுகளில் திரும்புப்போது
கண்டிப்பாக இண்டிக்கேட்டர்களை போடுங்கள். எதிரில் வண்டிவந்தால் லைட்டை
ப்ளிங்க் செய்யுங்கள். மற்றவர்கள் சிக்னலில் நிக்காமல் செல்கிறார்கள்
என்பதற்காக நீங்களும் அதனைச் செய்யவேண்டாமே...
உங்களது வண்டி செல்ஃப்-ஸ்டார்ட்தான் என்றாலும் கிக்-ஸ்டார்ட் செய்வது
எப்படி என்று தெரிந்துவைத்திருப்பது அவசியம். அப்போதுதான் செல்ஃப்-ஸ்டார்ட்
வேலைசெய்யவில்லை என்றாலும் பதட்டப்படாமல் வண்டியை இயக்கலாம். போலவே,
சென்டர் ஸ்டாண்ட் போடுவதும் அவ்வளவு ஒன்றும் கஷ்டமான டாஸ்க் அல்ல. அதனையும்
பழகிக்கொள்ளுங்கள்.
வண்டியை ஸ்டார்ட் செய்தபிறகே ஹெட்லைட்டை ஆன் செய்யுங்கள். இதனால்
பேட்டரியின் ஆயுள் கூடும். எப்போதும் ப்ரேக்கைப் பிடித்துக் கொண்டே வண்டியை
ஓட்டாதீர்கள். ப்ரேக் ஷூ சீக்கிரம் பழுதாகிவிடும்.
மழைக்காலத்தில் காலை நேரத்தில் பைக் ஸ்டார்ட் ஆகாமல் இன்ஜின்சூடாவதற்கு
நேரமெடுக்கும். அப்போது வண்டியை கிக்-ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் ஐடியலாக
விட்டு பின் வண்டியை எடுங்கள்.
டயரில் காத்து குறையாதவாறு அவ்வபோது ஏர்-செக் செய்து கொள்ளுங்கள்.
முக்கியமாக டயர் வழுவழுப்பாக ஆகும் வரை காத்திருக்காமல் குறிப்பிட்டை
இடைவேளையில் டயர்களை மாற்றுவது அவசியம். க்ரிப் இல்லையென்றால் மழை
காலங்களில் ப்ரேக் அடித்தாலே வண்டி ஸ்கிட் ஆகும்.
உங்களது சர்வீஸ் செண்டரில் குறிப்பிட்டிருக்கும் கால அவகாசத்தில் வண்டியின்
ஆயிலை மாற்றுவது, ஜென்ரல் சர்வீஸ் செய்வது போன்றவற்றைக் கட்டாயமாகக்
கடைபிடியுங்கள். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டால், பின் பெரிய
செலவாக நமக்குதான் பிரச்னை.
பெட்ரோல் ரெட் மார்க்கில் வரும்வரைக் காத்திருக்காமல் எப்போதும் பாதி டேங்காவது பெட்ரோல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் வண்டி ஓட்டுவது ஆடம்பரமாக இல்லாமல் அத்தியாவசம்
என்றாகிவிட்டது. எப்போதும் வண்டி ரிப்பேர் என்றால் மற்றவரை
எதிர்ப்பார்க்காமல் நாமே சரிசெய்ய பழகுவோம். தவிர தினசரி வண்டியை
பராமரிப்பதை மேற்கொள்வதால் பல நேரங்களில் சின்னச்சின்ன பிரச்னைகளுக்காக
வண்டி ரிப்பேராகி நடுரோட்டில் நிற்பதை தவிர்க்கலாம். எல்லாம் நம்
கையில்தானே!
No comments:
Post a Comment