வாத கப சுரம் தான் கொரோனா; மருந்து உண்டு: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad
Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday, 30 June 2020

வாத கப சுரம் தான் கொரோனா; மருந்து உண்டு:

கோவிட் 19ஐப் பற்றி இன்று பல கேள்விகள் எழுகின்றன. ஆங்கில மருத்துவ முறையை மட்டும் நம்பியிருக்கும் மேற்கத்திய நாடுகளில், இந்த நோயால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, கவலை தரக் கூடிய விஷயம் தான்.ஆங்கில மருத்துவத்தில் இந்த நோய் ஒரு புதிய வைரசால் உருவானதென்றும், அதற்கு மருத்துவம் இல்லை என்றும் கூறப்படுகிறது.


அப்படியென்றால், இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, சித்தா ஆகியவற்றில், இந்த நோயைப் பற்றிய கண்ணோட்டம் என்ன என்பதையெல்லாம் சற்று ஆராய்வோம். மேலும், இந்த நோய் முதன் முதலாகத் தோன்றிய சீன நாட்டில், இது எவ்வாறு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.

ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்த அனைத்து நாடுகளும், ஆங்கில மொழியையும், ஆங்கில மருத்துவத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டன. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த ஆயுர்வேத மருத்துவ முறைகளைப் புறக்கணித்து, ஆங்கில மருத்துவ முறையை, பிரதம மருத்துவமாக ஆங்கில ஆட்சி ஏற்படுத்தியது.ஆங்கில மருத்துவ முறைப்படி கொரோனா என்பது ஒரு வைரஸ் என்று கூறப்படுகிறது. இது போன்ற வைரஸ்கள் பல லட்சங்களுக்கும் அடங்காத எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஒரு மாபெரும் சவால்இந்த எண்ணற்ற வைரஸ்களும், பாக்டீரியாக்களும் சமூகத்தில் புதிய புதிய நோய்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஆங்கில மருத்துவத்திற்கு, இது ஒரு மாபெரும் சவால். ஒவ்வொரு வைரஸ் அல்லது பாக்டீரியாவால் உருவாகும் ஒவ்வொரு வியாதிக்கும், ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்து, பிறந்த கைக் குழந்தைக்குக் கூட எண்ணற்ற தடுப்பூசிகள் குத்தப்படுகின்றன. ஆனால் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதமோ, சித்த மருத்துவமோ இந்நோய்களை வைரஸ், பாக்டீரியா என்று நோக்குவதில்லை.உதாரணமாக, காமாலை என்ற நோய் ஆங்கில மருத்துவத்தில், ஒரு வைரசால் உருவாக்கப்படுவது எனக் கூறப்படுகிறது.

எனவே இதற்கு மருந்து கிடையாது. மணல்வாரி நோய் வேறு ஒரு வைரசின் தாக்குதலால் ஏற்படுகிறது. எனவே, அதற்கு ஒரு தடுப்பூசி. அக்கி நோயும் வைரசின் மூலம் உருவாகிறது.ஜுரங்களில் பெரும்பான்மையும் பல விதமான வைரஸ்களால் ஏற்படுவதால், இந்த வைரஸ் ஜுரங்களுக்கு மருந்துகள் கிடையாது. வயிற்றுப்போக்கு அல்லது பேதி, வைரஸ் அல்லது அது போன்ற பல கிருமிகளால் ஏற்படுகிறது. இதற்கும் சரியான மருந்துகள் இல்லை. இப்படி பல ஆயிரம் வைரஸ் அல்லது பாக்டீரியா என்ற அடிப்படையில் நோய்களைக் காண்பது,

ஆங்கில மருத்துவத்தின் ஒரு மாபெரும் குறைபாடு. இந்த வைரஸ் நோய்களுக்குத் தடுப்பூசிகளைத் தவிர, ஆங்கில மருத்துவத்தில் வேறு மருந்துகள் பெரும்பாலும் கிடையாது. மேற்கூறிய உதாரணங்கள் அனைத்துமே நம் பாரம்பரிய மருத்துவத்தில், நோய்களுக்குக் காரணமான வாதம், பித்தம், கபம் என்ற தோஷங்களின் அடிப்படையில், மூலிகை மருந்துகளைக் கொண்டு, சீராக வைத்தியம் செய்யப்படுகிறது.ஆயுர்வேத மருத்துவத்தில், நோய்களுக்கு அடிப்படைக் காரணம் வாயு, பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள் தான். இவற்றின் சமநிலை மாறாமல், எந்த ஒரு வியாதியும், உடலைத் தாக்காது.

இதைத்
தான் வள்ளுவர், 'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்று குறிப்பிட்டார்.சீனாவில் கொரோனா சீன நாட்டின் வூஹான் பகுதியில் இந்த நோய் முதன் முதலாகத் தாக்கியது. அங்கு, ஆங்கில மருத்துவச் சிகிச்சையில் இந்த நோய் கட்டுப்படவில்லை என்று தெரிய வந்தது. ஆரம்ப காலத்தில் ஏராளமான சீன நாட்டு மக்கள், இந்த நோயால் உயிரிழந்தனர். உடனே சீன அரசு, ஆயுர்வேத மருத்துவம் போன்ற அங்குள்ள பரம்பரை வைத்திய முறைகளைக் கையாண்டு, வெகு விரைவில் இந்த நோயைக் கட்டுப்படுத்தி, முற்றிலும் குணப்படுத்தியது என்ற செய்தி, இன்று உலகம் முழுதும் பரவலாக அறியும் உண்மை.

சீனா செய்த இந்த மகத்தான காரியத்தை, இந்திய அரசாலும் செய்ய முடியும். ஏனென்றால் சீன நாட்டைப் போலவே, இந்தியாவிலும், பரம்பரை வைத்தியமான ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களுக்குச் சிகிச்சை அளித்து வரும் ஆயுர்வேத மருத்துவத்தில், கோவிட் ஜுரம் என்பது ஒரு புதிய ஜுரமாக இருந்த போதிலும், அது ஒரு புதிர் அல்ல.கோவிட் 19, வாத - கப சுரம்: இதுவரை நமக்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், கோவிட் நோயாளிகளின் அறிகுறிகள், வாயுவும், கபமும் சேர்ந்ததாகத் தென்படுகிறது. எனவே, கோவிட் 19ஐ, ஒரு வாத கப சுரம் என்று கூறலாம். இந்த நோய்க்கு, வாத கப சுரத்திற்குள்ள ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்தி நல்ல பலனை அடைந்துள்ளோம்.கடந்த ஒரு வாரத்தில், எங்கள் மருத்துவமனையில், 70க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு, ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்பட்டன.

அனைவருக்கும் ஒரே விதமான மருந்து கொடுக்கப்படவில்லை. நோயாளிகளின் நோய்த் தன்மைக்கு ஏற்றவாறு மருந்துகள் கொடுக்கப்பட்டன. சர்க்கரை நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள், மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டதை விட வேறுபாட்டுடன் காணப்படும்.குழந்தைகளுக்கும் சிகிச்சை உண்டு இங்கே.வாரத்திற்கு மூன்றுமுறை, 'டயாலிசிஸ்' செய்யும், ௫௭ வயது பெண், சர்க்கரை நோய்க்கு, இன்சுலினும் போட்டுக் கொள்கிறார். கொரோனா, 'பாசிட்டிவ்' உடன் இருந்தார். அலோபதி மருத்துவமனைகள் எதுவும் இவருக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை.

நம்மிடம் சிகிச்சைக்கு வந்தார். எட்டு நாட்கள் முழு சிகிச்சைக்குப் பின், அலோபதி மருத்துவமனையில், 'டயாலிசிஸ்' செய்ய முன்வந்தனர். ௧௩ நாட்களுக்குப் பின், பரிசோதனை செய்ததில், கொரோனா, 'நெகட்டிவ்' ரிசல்ட் வந்தது.ஆயுர்வேத மருத்துவத்தில், இந்த கோவிட் வாத கபசுரத்திற்கு, ஏராளமான மருந்துகள் உள்ளன.பாரங்யாதி, வியாக்ரயாதி போன்ற கஷாயங்கள், சுதர்சனம், தாலீசாதி போன்ற சூரணங்கள் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தி, எளிதில் குணப்படுத்தலாம்.

எந்த ஒரு தோஷமும் உடலில் சீற்றமடையும் போது, அதன் அறிகுறிகள் உடலில் தென்படும். ஆயுர்வேத சிகிச்சைக்கு வந்த கோவிட் 19 நோயாளிகள் அனைவரும், ஜுரம், இருமல், உடல் வலி, தொண்டை கட்டுதல் அல்லது கரகரப்பு, மூச்சுத் திணறல், தலைவலி, வயிற்றிப் போக்கு, உடல் அசதி, வாசனை உணர்வு இழத்தல், ருசியின்மை போன்ற அறிகுறிகளுடன் தென்பட்டனர்.இந்த நோயாளிகள் அனைவரும், ஆயுர்வேத கஷாயங்கள், சூரணங்கள், மாத்திரைகள் இவற்றைப் பயன்படுத்தி, முற்றிலும் குணம் அடைகின்றனர். இந்த மருந்துகளுடன், உணவுப் பழக்க வழக்கங்களும் கண்காணிக்கப்படுகின்றன.ஜீரணிக்க எளிதான புழுங்கரிசி கஞ்சி வடித்த சாதம், பாசிப்பருப்பு போன்ற உணவுடன், செரிமானத்தை அதிகப்படுத்தும், மிளகு, ஜீரகம், தனியா போன்றவை சேர்த்து சமைத்த உணவை உண்ணும் படி வலியுறுத்தப்படுகிறது. படிப்படியாகக் குறைக்கிறது

அஜீரணத்தை ஏற்படுத்தும் செரிமானத்திற்குக் கடுமையான உணவுகள், அசைவ உணவு, சளியை உண்டு பண்ணும் தயிர், மோர், குளிர்பானங்கள், பழங்கள் இவைகளைத் தவிர்ப்பது அவசியம்.இது போன்ற உகந்த உணவுப் பழக்கங்களும், மருந்துகளும், இந்த வாத கப சுரத்தை, படிப்படியாகக் குறைக்கிறது.ஜுரமும் அத்துடன் கூடிய அனைத்து அறிகுறிகளும், முற்றிலும் உடலை விட்டு நீங்கியவுடன், கொரோனா நோயாளிகளின் உடல் அசதி, உடல் தளர்ச்சி இவற்றை நீக்கி, உடல் வலுவை ஊக்கப்படுத்த, ரசாயன மருந்துகள் வலியுறுத்தப்படுகின்றன.

ஆங்கில மருத்துவத்தில் இந்த நோய்க்கு மருந்து இல்லை என்று உணர்ந்தும், அனேக நோயாளிகள், பாரசிட்டமால் மாத்திரையும், ஹைட்ராக்சிகுளோரோக்வின், ஆன்ட்டிபயாடிக், ஆன்ட்டி வைரல் மாத்திரைகளைச் சாப்பிட்டு காலம் கடத்துவதால், உடல் நிலை மோசமாகிறது என்பது, இங்கு குறிப்பிடத்தக்கது.இந்த நோயின் ஆரம்ப காலத்திலே உகந்த பாரம்பரிய மருந்துகளைப் பயன்படுத்தி, நோயை விரைவில் குணப்படுத்தவது மிகவும் அவசியம்.டாக்டர் பி.எல்.டி.கிரிஜாசஞ்சீவனி ஆயுர்வேத யோகா சென்டர், சென்னை.sanjeevanifoundation@gmail.com✆ 044 - 2441 4244 / 2440 5106

No comments:

Post a Comment

Post Top Ad