
பெண்களுக்கு ஏற்படும் காலையில் நேர டென்ஷன்
பெண்களின் காலை வேளைகளில் எப்பொழுதுமே
பரபரப்பாக இருப்பார்கள். சிலர் வேலைக்கு புறப்படுவார்கள். சிலர் உணவு
சமைத்து கொண்டும், அதே நேரத்தில் குழந்தைகளுக்கு தேவையான உணவை தயார் செய்து
கொண்டு இருப்பார்கள். இந்த காலை வேலையில் அதிக டென்ஷசனுடன் இருப்பார்கள்,
இந்த டென்ஷனை போக்க எளிமையான வழிகள் உள்ளன.
எப்பொழுதும் காலை வேலைக்கு தேவையான பொருட்கள் மற்றும் வெளியில் செல்லும்
பொழுது எடுத்து உடுத்தக் கூடிய உடைகள் அனைத்தையும் இரவே தயார் செய்து
வைத்து கொள்ளுங்கள். காலையில் எழுந்து தேவையான பொருட்களை தேட
வேண்டியதில்லை. உங்கள் குழந்தைகளை சரியான நேரத்திற்கு தூங்க வைக்க
வேண்டும்.
இப்படி செய்தால், அவர்களும் காலையில் எழுந்து விடுவார்கள், நீங்கள் அதிக
நேரம் எழுப்ப வேண்டிய வேலை குறைவாக இருக்கும். அனைத்து பொருட்களுக்கும்
தனியாக இடம் வைத்து, அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால்
எந்த பொருள், எந்த இடத்தில் இருக்கும் என உங்களுக்கு நியாபகம் இருக்கும்,
மறதி வராது.
காலை எழுந்து என்ன செய்யப்போகிறோம் என்பதை முன் தினமே பட்டியல்
போட்டுவிடுங்கள். இப்படி செய்தால் உங்கள் நேரம் மிச்சமாகும். டென்சன்
குறைந்துவிடும். உங்கள் வீட்டில் மற்றவர்கள் எழுந்திருக்கும் நேரத்தை விட
15 நிமிடங்கள் முன்பாகவே எழுந்து விடுங்கள்.
இந்த செயல் உங்களுக்கு பரபரப்பு மற்றும் டென்ஷனில் இருந்து உங்களை விலக
செய்யும். காலை நேரத்தில் எழுந்தவுடன் கடவுளை வணங்குவது உங்களுக்கு ஒரு
நல்ல மன அமைதியை தரும்.
No comments:
Post a Comment