ஊரடங்கு உத்தரவால் கவலையா? மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யலாம் வாங்க : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

 Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday, 10 April 2020

ஊரடங்கு உத்தரவால் கவலையா? மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யலாம் வாங்க :

ஊரடங்கு உத்தரவால் கவலையா? மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யலாம் வாங்க

உடற்பயிற்சி
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இது மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையையே மாற்றியுள்ளது. ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள், பூங்காவில் நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்பவர்கள் எனப் பலரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.


பூங்காக்களுக்குச் சென்று நடைப்பயிற்சி செய்ய முடியாத பட்சத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்வதும், உடற்பயிற்சி செய்வதும் சரியா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு சமூக வலைதளங்களில் இவ்வாறான பதில்கள் பரவி வருகின்றன. `மொட்டை மாடியில் உலவக் கூடாது. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். மொட்டைமாடிக்குச் சென்று உலவினால் நோய்த் தொற்று ஏற்படக்கூடும்' என்றெல்லாம் கருத்துகள் பரவிவருகின்றன.
மாடிப்படி ஏற முடியாதவர்கள் தவிர்த்து மற்றவர்கள் மொட்டைமாடியில் தாராளமாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். வீட்டிலேயே அடைந்து கிடப்பது போலத் தோன்றுபவர்களுக்கும் மொட்டை மாடியில் நடப்பது புத்துணர்வைத் தரும்.

எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியது அல்ல. வைரஸ் தொற்று உள்ள ஒருவர் மற்றொருவரைத் தொடுவதாலும், அவரது இருமல், எச்சில் போன்றவற்றின் மூலம் வெளியேறும் நீர்த்திவலைகள் மூலமும் மட்டுமே இது பரவுகிறதே தவிர காற்றின்‌ மூலம் பரவாது. எனவே மொட்டை மாடியில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யலாம். ஒருவேளை, மொட்டை மாடியில் அதிகமானோர், கூட்டம் கூட்டமாக உடற்பயிற்சி செய்ய வருகிறார்கள் என்றால் மட்டும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். மற்றபடி பிரச்னை எதுவும் இல்லை.

No comments:

Post a Comment

Post Top Ad