உணவுப்பொருட்களை பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் வைக்கலாம்: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday, 9 September 2018

உணவுப்பொருட்களை பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் வைக்கலாம்:

உணவுப்பொருட்களை பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் வைக்கலாம்
பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம் குளிர்சாதனப் பெட்டியான “பிரிட்ஜ்” என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில் வெப்பநிலை இருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால் உணவுப் பொருட்கள் நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.

பழங்கள் :

ஆப்பிள் இதை குளிர்சாதன பெட்டியில் 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம்.
வாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். பச்சை நிறம் நீங்கி 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
திராட்சை இதனை பிரிட்ஜில் கழுவாமல் வைத்திருந்து 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
ஆரஞ்சு, கமலா, கிரேப் இதனை 2 வாரங்கள் பிரிட்ஜில் வைக்கலாம்.
பைனாபிள் - நன்கு பழுத்த பிறகு பிரிட்ஜில் 3 - 5 நாட்கள்.
தர்பூசணி துண்டு - பிரிட்ஜில் 6 - 8 நாட்கள் வைக்கலாம்.
எலுமிச்சை - இரண்டு வாரம் வைக்கலாம்.
பெர்ரி பழ வகைகள் - பிளாஸ்டிக் பையில் போட்டு 2-3 நாட்கள் வைக்கலாம்.
பேரிக்காய், சப்போட்டா, கொய்யா போன்றவைகள் - பழுக்கும்வரை வெளியில் வைத்திருந்து பிறகு பிரிட்ஜில் 3 -5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
திராட்சை, பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்.


காய்கறிகள் :

பீன்ஸ் - இதை நன்கு கழுவி, துடைத்து விட்டு பிரிட்ஜில் வைத்திருந்து 3 - 5 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும்.
கத்தரிகாய் - இதை வெளியிலும் வைக்கலாம், பிரிட்ஜில் வைப்பதானால் பிளாஸ்டிக் பையில் போட்டு 3 - 4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
தக்காளி - வெளியில், பிரிட்ஜ் இரண்டு இடத்திலும் வைக்கலாம். ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
கேரட் - நன்கு கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
பீட்ருட் - இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
காலிபிளவர், முள்ளங்கி - இரண்டு வாரம் பிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
வெண்டைக்காய் - 5 - 7 நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்
உருளைக்கிழங்கு - வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம்
வெங்காயம் - வெளியில் காற்றோட்டமான இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம்.
குடமிளகாய் - நன்கு கழுவி உலர்த்திய பிறகு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு வாரம் வைக்கலாம்.
கீரை வகைகள் - பிளாஸ்டிக் பையில் 3 - 5 நாட்கள் வைக்கலாம்.
முட்டகோஸ், செல்லரி - பிளாஸ்டிக் பையில் 2 வாரங்கள் வைக்கலாம்.
மஷ்ரும் - அதிகபட்சம் 2 - 3 நாட்கள் வைக்கலாம்.
பூசணிக்காய், வெள்ளரிக்காய் - ஒரு வாரம் வைக்கலாம்.


அசைவ உணவுகள் :

முட்டை - பிரிட்ஜில் 3 -5 வாரங்கள் வைக்கலாம் அல்லது காலாவதியாகும் நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
வேக வைத்த முட்டை - பிரிட்ஜில் 5 - 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
முட்டை வெள்ளைக்கரு - பிரிட்ஜில் 2 - 3 நாட்களுக்குள் முட்டையின் மஞ்சள் கரு 2 - 4 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
பிரஷ் சிக்கன், தோல் நீக்காதது - 1 - 2 நாட்கள் வைத்திருக்கலாம்.
பிரஷ் மட்டன், பீஃப் - 1 -3 நாட்கள் வைக்கலாம்.
மீன்- 1 - 2 நாட்கள் வைக்கலாம்.
இறால், நண்டு - பிரிட்ஜில் இரண்டு நாட்கள் வைக்கலாம்.
சமைத்த இறைச்சி - நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்.
சமைத்த மீன் 3-4 நாட்கள் பிரஷ் மீன் 1-2 நாட்கள்.
ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்.
பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்.

பால் பொருட்கள் :

மற்றபடி பால். தயிர், வெண்ணெய் போன்ற தினமும் / dairy பொருட்களை அவைகள் காலாவதியாகும் நாட்களை கவனித்து வாங்கி அதற்குள் பயன்படுத்திடுவது நல்லது. மேலும் அவைகளை நமது குடும்பத்தின் தேவைக்கேற்ற அளவில் வாங்குவது பண விரயத்தையும் தடுக்கும்.

பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்
பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்
மோர் 2 வாரங்கள்
தயிர் 7-10 நாட்கள்
காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.

No comments:

Post a comment

Post Top Ad