சர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday, 6 February 2018

சர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்?

சர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்?
“சர்க்கரை நோயாளிகளுக்கு முதலில் பாதிக்கப்படுவது கால்கள். 'உச்சி முதல் உள்ளங்கால் வரை பரிசோதிக்க வேண்டும்' என்று பொதுவாக மருத்துவத்தில் சொல்வார்கள். 

* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு பாதத்தில் உணர்ச்சிகள் குறைந்துவிடும், நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைந்துவிடும். நரம்புகள் பாதிப்படையும். பாதத்தைப் பொறுத்தவரை எலும்புப் பகுதியில் பாதிப்பு, காலில் சுளுக்கு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டாலும், வீக்கம் இருக்கும்; வலி தெரியாது, உணர்ச்சி இருக்காது. பாதிப்புகள் எதுவும் தெரியாத நிலையில், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் அசைவு கொடுப்பதால் அழுத்தம் ஏற்பட்டு புண் பெரிதாகும்.

* காலில் புண் ஏற்படும்போது முதலில் பாதிப்படைவது கால் நரம்புகளே. காலப்போக்கில் பாதிப்படைந்த பகுதியில் அழற்சி ஏற்படும். அதைக் கவனிக்காமல் விடுவதால் நரம்பில் பாதிப்புகள் தீவிரமடைந்து தசைகளின் செயல்பாடுகள் தடைபடும். காலை ஊன்றமுடியாமல் அவதிப்பட நேரிடும்.

* கால் ஆணி, பாத வெடிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். குறிப்பாக இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கால்களைப் பராமரிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், தங்களின் தோல், பாதம், ஊட்டச்சத்து, எலும்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

No comments:

Post a comment

Post Top Ad