pimples on the forehead home remedies - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday, 25 December 2017

pimples on the forehead home remedies

நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்
நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன அவை உங்களின் உடல் நலனைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.

தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட தலையில் பருக்கள் தோன்றும். தலையை சரியாக பராமரிக்கவில்லை, அதிக வறட்சி அல்லது அல்லது எண்ணெய் இருந்தால் அவை நெற்றியில் பருக்களாக உருவாகிடும்.

நெற்றியில் ஏற்படும் பருக்களுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று இது. அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும்.

ஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்ப்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும்.

முகப்பரு வருவதை தவிர்க்க அதிக தண்ணீர் குடித்திடுங்கள், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad