CBSC SYLLABUS EASY TO SUCCESS IAS EXAM: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday 14 August 2017

CBSC SYLLABUS EASY TO SUCCESS IAS EXAM:

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ்.தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தகவல்



சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறினார்.
போட்டித்தேர்வுகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி'? என்பது குறித்து அனுபவம் மிகுந்தவர்களை அழைத்து ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சி.சைலேந்திரபாபு கலந்துகொண்டு போட்டி தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், மாணவர்களிடம் கேள்விகளை கேட்டு அவர்களுக்கு தான் எழுதிய நூல்களை பரிசாகவும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வை பட்டப்படிப்பு முடித்த யார் வேண்டுமானாலும் எழுதலாம். கிரிக்கெட், சினிமா உள்ளிட்ட எந்த சிந்தனையும் இல்லாமல் 2 ஆண்டுகள்முழுமனதுடன் படிக்க வேண்டும். தேர்வில் 70 சதவீத கேள்விகள் தினசரி நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளில் இருந்து தான் கேட்கப்படுகிறது.

எனவே தினசரி 2½ மணி நேரம் செய்தித்தாள் கண்டிப்பாக படிக்க வேண்டும். தமிழ் மொழியில் தேர்வு எழுதலாம் என்றாலும் ஆங்கில அறிவு என்பது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. குறிப்பாக சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடபுத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டும். நேர்மையான இளைஞர்களின் பங்களிப்பு அரசு பொறுப்புகளுக்கு தேவைப்படுவதால், அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகளை கூறிகொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நூலகர் காமாட்சி வரவேற்றார். மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலரும் கலந்து கொண்டனர். நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad