Why Does My Toilet Smell So Bad? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 5 July 2017

Why Does My Toilet Smell So Bad?

உங்கள் கழிவறையில் அதிக துர்நாற்றம் வீசுகிறதா? அதை நீக்க சில எளிய வழிகள்!!!

சிலரது வீடுகளில் கழிவறை மிகவும் துர்நாற்றத்துடன் இருக்கும். சில வீடுகளில் அந்த கழிவறை துர்நாற்றம் வீடு முழுவதும் வீசும். இப்படி இருந்தால், எப்படி வீட்டில் இருக்க முடியும். பலர் இந்த துர்நாற்றத்தைத் தடுப்பதற்காக, கடைகளில் விற்கப்படும் ரூம் பிரஷ்னர்களைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் அது சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும்.

ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்தாலோ அல்லது அவற்றை கழிவறையினுள் தெளித்தாலோ, துர்நாற்றம் வீசுவதையே தடுக்கலாம். சரி, இப்போது கழிவறையில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் அப்பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

எலுமிச்சை சாறு
கழிவறை துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருட்களில் ஒன்று எலுமிச்சை சாறு. இந்த சாற்றினை தினமும் இரவில் படுக்கும் முன் கழிவறையின் தரை மற்றும் சின்க்களில் தெளித்து விட்டு, சிறிது நேரம் கழித்து, நீரை ஊற்றுங்கள். இதனால் கழிவறையில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை ஒரு பக்கெட் நீரில் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை கழிவறையை சுத்தம் செய்யுங்கள். இதன் மூலமும் கழிவறை நாற்றத்தைத் தடுக்கலாம்.

வினிகர்
கருப்பு அல்லது ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்யலாம். இதனால் கழிவறையில் உள்ள துர்நாற்றம் மட்டுமின்றி, அழுக்குகளும் முழுமையாக நீங்கும்.

சோப்பு தண்ணீர்
நல்ல நறுமணமிக்க சோப்பு தூளை நீரில் கலந்து, அதனைக் கொண்டு கழிவறையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கழுவினால், கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.

நறுமணமிக்க எண்ணெய்
நல்ல நறுமணமிக்க எண்ணெயும் கழிவறை துர்நாற்றத்தை நீக்க உதவும். அதற்கு அந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன், உங்கள் கழிவறையின் மூலைகளில் தெளித்து விட வேண்டும்

No comments:

Post a Comment

Post Top Ad