WORLD YOGA DAY -PRIME MINISTER ADVICE: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday, 21 June 2017

WORLD YOGA DAY -PRIME MINISTER ADVICE:

செலவில்லாத உடல்நல காப்பீடு :பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
லக்னோ: ''உடல் நிலைக்கு எந்த செலவும் செய்யாமல், காப்பீடு செய்வது போன்றது யோகா,'' என, பிரதமர் மோடி கூறினார்.
செலவில்லாத,உடல்நல,காப்பீடு,பிரதமர்,நரேந்திரமோடி,பெருமிதம்
உ.பி., மாநிலம் லக்னோவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தி லும், ஒருங்கிணைந்த ஒரு அங்கமாக யோகா உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்,
நம் முன்னோர்கள், யோகாவின் வலிமையை கண்டறிந்தனர். யோகா பயிற்சியால், கடும் தவம் செய்து, இறைவனை கண்டனர். இன்று, உலகை ஒருங்கிணைக்கும் சக்தியாக, யோகா மாறியுள்ளது.



உலகுக்கு, இந்தியா அளித்த கொடை, யோகா. நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில், பல கல்வி நிறுவனங்கள், யோகா மையங்களை திறந்துள் ளதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். யோகா ஆசிரியர்களின் தேவை, அதிகரித்து உள்ளது. இந்திய யோகா ஆசிரியர்களுக்கு, உலகம் முழுவ தும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. யோகா மூலம், இந்தியர்களுக்கு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளது.

ஏனெனில், யோகாநிகழ்ச்சிகள் நடக்காத நாடே, இன்று உலகில் இல்லை. நீண்ட ஆயுளை விட, நோயற்ற வாழ்வு தான் முக்கியம். அதை, யோகா வழங்குகிறது. உடல் நிலைக்கு எந்த செலவும் செய்யாமல், காப்பீடு செய்வது போன்றது
யோகா. உணவுக்கு உப்பு மிகவும் அவசியம்; அது மிகவும் எளிதாகவும் கிடைக்கிறது. உணவுக்கு தேவை சிறிதளவு உப்பு தான்.
ஆனால், அது இல்லாவிட்டால், உணவு சுவையாக இருக்காது. உணவுக்கு மட்டுமல்ல, உடலுக்கு உப்பு சக்தி மிகவும் அவசியம். அதுபோல், நம் வாழ்க்கைக்கு யோகா மிகவும் அவசியம்.இவ்வாறு மோடி பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad