TODAY RASI PALN 17.06.2017: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday, 16 June 2017

TODAY RASI PALN 17.06.2017:

தின பலன்
மேஷம்
நீண்டநாளாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த பிரபலத்தை இன்று சந்திப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
ரிஷபம்
வீண் விவாதங்கள் நீங்கும். பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
மிதுனம்
எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
கடகம்
காலை 8. 53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
சிம்மம்
காலை 8. 53 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
கன்னி
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
  துலாம்
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
விருச்சிகம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
தனுசு
வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
மகரம்
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
கும்பம்
காலை 8. 53 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல் நலம் சீராகும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
  மீனம்
காலை 8. 53 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவன்- மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

No comments:

Post a Comment

Post Top Ad