TNPSC CERTIFICATE VERIFICATION NEWS: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday, 15 June 2017

TNPSC CERTIFICATE VERIFICATION NEWS:

TNPSC: கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் தேர்வு: ஜூன் 27, 28-இல் சான்றிதழ் சரிபார்ப்பு:

கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் தேர்வில் தேர்வானவர்களுக்கு வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு III-இல் அடங்கிய கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான 24 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 46,797 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகள் அடிப்படையில் வெளிச்சந்தைப்பிரிவு (Open Market Category)  காலிப்பணியிடத்தின் கீழ் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தாற்காலிமாகத் தேர்வு செய்யப்பட்ட 137 விண்ணப்பதாரர்களின் பட்டியல் IV www.tnpsc.gov.in  என்ற தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Top Ad