SSLC SUPLIMENTARY EXAM HALL TICKET DOWNLOAD HERE: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday 19 June 2017

SSLC SUPLIMENTARY EXAM HALL TICKET DOWNLOAD HERE:

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுத ‘ஹால் டிக்கெட்’; நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு இந்த மாதம்மற்றும் அடுத்த மாதம்(ஜூலை) நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்(தட்கல் உட்பட) நாளை(புதன்கிழமை) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு அடங்கிய அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்களில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணான 15–க்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் கண்டிப்பாக செய்முறைத்தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்துத்தேர்வுக்கும் வருகை புரியவேண்டும்.நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கு வருகைபுரியாதோர், நடைபெறவுள்ள துணைத்தேர்வில் அறிவியல் பாட செய்முறை தேர்வு எழுதுவதோடு, அறிவியல்பாட கருத்தியல் தேர்வையும் மீண்டும் கண்டிப்பாக எழுத வேண்டும்.செய்முறைத் தேர்வு எழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்குதேர்வுக்கூட அனுமதி சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே வருகிற 22–ந் தேதி மற்றும் 23–ந் தேதி செய்முறைத்தேர்வு நடத்தப்படும்.எனவே, இத்தேர்வர்கள் விவரம் பெற தங்களுக்கு உரிய தேர்வு மைய தலைமை ஆசிரியரை மேற்படி நாட்களில் அணுகி கொள்ளலாம். ஹால் டிக்கெட் இன்றி யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad