SCHOOL BOOKS SYLLSBUS CHANGED NEXT YEAR-EDUCATIONAL MINISTER: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday, 15 June 2017

SCHOOL BOOKS SYLLSBUS CHANGED NEXT YEAR-EDUCATIONAL MINISTER:

அடுத்த கல்வி ஆண்டில் புதிய பாட திட்டம் அறிமுகம்

 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் பதிலளித்து பேசியதாவது: பள்ளி  ஆசிரியர்களுக்கு ஒளிவு மறைவற்ற வகையில் எந்த இடையூறும் இல்லாமல் பணியிட  மாறுதல் வழங்க வேண்டும் என்பதற்காக கடந்த 19ம் தேதி முதல் கவுன்சலிங்  நடத்தி 12 ஆயிரத்து 959 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.  தேர்வு முடிவுகளை மாணவர்கள் விரைவில் அறிந்து கொள்ளும் வகையில் தேர்வு  முடிவு வெளியான 2 நிமிடத்தில் செல்போனுக்கு முடிவுகள் அனுப்பும் வசதி  செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கும் தேர்வு கொண்டு வந்துள்ளோம்.  நீட் தேர்வை சந்திக்கும் வகையில் மாணவர்களுள் மாதிரி வினாத்தாள்கள்,  விடைத்தாள் மாதிரிகளுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சிபிஎஸ்இக்கு  இணையான கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிய  பாடத்திட்டம் உருவாக்க குழு அமைக்கப்பட உள்ளது. ஒரு வாரத்தில் கருத்து  பெறப்பட்டு அறிவிக்கப்படும்.  தமிழகத்தில் 1172 மையங்கள் உருவாக்கி  கணினி மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். யோகா பயிற்சியும் அளிக்க தனியாக பயிற்சியாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அண்ணா  நூற்றாண்டு நினைவு நூலக மேம்பாட்டுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கி நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழகத்தில் 7 லட்சத்து 53  ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். அதற்கான முடிவு விரைவில் வெளியிடப்படும்.  ரூ.7500 ஊதிய விகிதத்தில் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளிகளில்  படிக்கும் மாணவர்கள் விகிதத்துக்கு ஏற்ப ஆசிரியர் தேவை  குறித்து விவரம்  பெறப்படும். மாணவர்கள் சேர்க்கை கண்காணிக்கப்படும்.

தனியார் பங்களிப்புடன்  10 ஆ்யிரம் கழிப்பிடங்கள் பள்ளிகளில் கட்டப்படும். உள்ளாட்சி நிதியை பெற்று  ஊரகப் பகுதியில் இயங்கும் 8 ஆயிரம் நூலகங்கள் சிறந்த நூலகமாக  மாற்றப்படும். சிறந்த கல்வியாளர்களாக மாணவர்கைள உருவாக்கும் வகையில்  வரும்  கல்வி ஆண்டில் 1, 6, பிளஸ் 1 வகுப்புகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்  செய்யப்படும். அடுத்த கல்வி ஆண்டில் 3,4,5 வகுப்புகளிலும் அதற்கு அடுத்த  கல்வி ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்படும்;  அதற்காக பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவர் என்று கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad