PART TIME TEACHER POST STATUS-EDUCATION MINISTER CLARIFICATION: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday 27 June 2017

PART TIME TEACHER POST STATUS-EDUCATION MINISTER CLARIFICATION:

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே..செங் கோட்டையன் கூறினார்.கோவையில் செய்தியாளர்களிடம் அவர்
நேற்று கூறியதாவது:
 கல்வித் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்று வதற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம். இது வரை47 அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன. மேலும் பல அறிவிப்புகள் வெளியாக உள்ளன.‘நீட்தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் பல்வேறு பொதுத் தேர்வு களிலும் வெற்றிபெறும் வகை யில் தமிழக மாணவர்களின் திறனைமேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் மற்றும் வரை படங்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்சி பாடத் திட்டத்துக்கு சமமான கல்வியை மாநில அரசு கல்வித் திட்டத்திலும் அமல்படுத்த விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசுப் பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைப்பது தொடர்பான உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில் இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கும்.பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் ரூ.7,700-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் 1-ம் தேதியே பகுதி நேர ஆசிரி யர்கள் சம்பளம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பகுதி நேர ஆசிரியர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தனியார் பள்ளிகளில் வசூலிக் கப்படும் கல்விக் கட்டணம் தொடர்பாக, நீதிமன்றத் தீர்ப்புக் குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், மிக அதிக அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட் டுள்ள குழுவிடம் புகார் தெரிவித்து, உரிய தீர்வு காணலாம்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஒவ்வொருவரும் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. எனினும், அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை. மதுரையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்பார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad