Homemade face packs, face masks for beauty care - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday 13 June 2017

Homemade face packs, face masks for beauty care

பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ள வேப்பிலை எப்படியெல்லாம் அழகுப் பொருளாகவும், சரும பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது என்று பார்க்கலாம்.
வேப்ப மரத்தை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் என்று சொல்லலாம். இந்த வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். அதிலும் இந்த வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர். ஆயுர் வேத மருத்துவத்தை மேற்கொண்டால், சரிசெய்ய முடியாத நோயையும் சரிசெய்யலாம் என்று சொல்வதற்கு காரணம் வேப்பிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இப்போது அத்தகைய வேப்பிலை எப்படியெல்லாம் அழகுப் பொருளாகப் பயன்படுகிறது என்று பார்ப்போமா!!!
* வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

* ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.



* வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.

* வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.

* வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad