நில பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பா : சுற்றறிக்கை போலி என அரசு விளக்கம் - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday, 20 June 2017

நில பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பா : சுற்றறிக்கை போலி என அரசு விளக்கம்

'நில பத்திரங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்; அதில், ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளதாக, பரவும் சுற்றறிக்கை உண்மையானதல்ல' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நில பத்திரங்களை, டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கை என, ஒரு ஆவணம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், '1950 முதல் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நில ஆவணத்தையும், ஆகஸ்ட், 14க்குள் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். அத்துடன், நில உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்படாத நில ஆவணங்கள், பினாமி பரிமாற்ற தடுப்பு, திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமான, பி.ஐ.பி., வெளியிட்ட அறிக்கை:
நில பத்திரங்களை கணினிமயமாக்குதல் மற்றும் அதில் ஆதார் எணணை இணைத்தல் தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலகம் பெயரில், வெளியிடப்பட்டதாக கடிதம் ஒன்று, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்.
மத்திய அரசு, இதுபோன்ற எந்த கடிதத்தையும் வெளியிடவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், இது குறித்து காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad