அமைச்சரின் அறிவிப்பால் ஆசிரியர்கள் குழப்பம் : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday 15 June 2017

அமைச்சரின் அறிவிப்பால் ஆசிரியர்கள் குழப்பம் :

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து பேசினார். இறுதியில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த 37 அறிவிப்பும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்ந்து 5 அறிவிப்பும் வெளியிட்டார். முன்னதாக அவர் பதிலுரையில் பேசும் போது, இங்கு 43 அறிவிப்புகள் வெளியிட உள்ளேன். அந்த அறிவிப்பு குறித்து நாடே திரும்பிப் பார்க்கப் போகிறது என்று பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.


அறிவிப்பு வெளியிடும் போது பேசிய அமைச்சர் அறிவிப்புகள் முழுவதையும் படிக்காமல், அறிவிப்புகளின் தலைப்பை மட்டும் படிக்கிறேன், உள்ளே இருக்கும் கருத்துகளை அறிவிப்பு புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டு படித்தார்.
ஆனால், எல்லாரும் பரபரப்புடன் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் அதில் இடம் பெறவில்லை. குறிப்பாக ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கையில் ஒன்றுகூட அதில் இடம் பெறவில்லை. அதனால், ஆசிரியர்கள் அந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர்.மேலும், 9வதாக இடம் பெற்ற அறிவிப்பில் தற்காலிக பணியிடங்களுக்கு, பணியிட தொடர் நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக 17,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
 இதுகுறித்து பள்ளிக் கல்வி–்த்துறை செயலாளர் உதயசந்திரன் கூறுகையில்; அமைச்சர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள 17,000 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படும் என்பது தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துகிறோம் என்று அர்த்தம் கிடையாது. தற்காலிக பணியிடங்களில் முழு நேர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதவர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே, அந்த தற்காலிக பணியிடங்கள் மட்டும் நிரந்தரப்பணியிடங்களாக மாற்றம் செய்யப்படுகின்றன. யாரையும் பணி நிரந்தரம் செய்யவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad