Foods-that-protect-bones. - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday 17 February 2017

Foods-that-protect-bones.

எலும்புகளைக் காக்கும் உணவுகள்:
நம் உடல் உறுதியின் அடிப்படையாக உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சிய சத்து மிகவும் முக்கியமானது. நமக்கு கால்சிய சத்துகளை வழங்கும் உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்...  
எலும்புகளைக் காக்கும் உணவுகள்நம் உடல் உறுதியின் அடிப்படையாக உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சிய சத்து மிகவும் முக்கியமானது.
கால்சியசத்து குறையும்போது, எலும்புகள் பலவீனம் அடையும். ரத்த செல்கள் உருவாவதில் பிரச்சினை, மூட்டுவலி போன்றவை உண்டாகும்.
நமக்கு கால்சிய சத்துகளை வழங்கும் உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்...
* பாலில் கால்சிய சத்து அதிகம் உள்ளது. பால் குடிப்பது சிலருக்குப் பிடிக்காவிட்டால், தயிரை அதிகமாக தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பாலில் உள்ளதைப் போல தயிரிலும் கால்சியம் அதிகமாக உள்ளது.

* கடல் உணவுகளில், இறாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. ஆனால், இறாலைச் சமைக்கும்போது, அதை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அதில் உள்ள கால்சிய சத்து போய்விடும்.

* மீன் வகைகளில் மத்தி மீனிலும் கால்சிய சத்து நிறைந்திருக்கிறது. எனவே மத்தி மீனை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

* பச்சை இலைக் காய்கறிகளில் கால்சிய சத்து அதிகம். அந்த வகையில், பசலைக் கீரை மற்றும் புராக்கோலி போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால், நமது உடம்புக்குத் தேவையான கால்சிய சத்து கிடைக்கும்.

* கொட்டைப்பருப்பு வகைகளில் ஒன்றான பாதாமில், வைட்டமின், கால்சிய சத்து நிறைந்திருக்கிறது. எனவே தினமும் பாதாம்பருப்புகளைச் சாப்பிட்டு நம் எலும்புகளை பலப்படுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad