Name Change Application Form |How to Name Change Tamilnadu Gazette ... - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday 5 January 2017

Name Change Application Form |How to Name Change Tamilnadu Gazette ...

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்.

🌺 வீட்டில் ஒருபெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்றநினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர்தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ
அல்லது ஒரு நல்ல தமிழ்ப்பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.
சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?
🌺 பெயர் மாற்றம்செய்வதற்கான தகுதிகள்:
🔷 தமிழ்நாட்டில் வசிக்கும்எவரும் விண்ணப்பிக்கலாம்.
🔷 விண்ணப்பதாரர் 60 வயதுக்குமேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
🌺 தேவையான ஆவணங்கள்:
🔵 பிறப்பு / கல்விச்சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
🔵 பிறப்பு / கல்விச்சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசுமருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்றுசமர்ப்பிக்க வேண்டும்.
🔵 சமீபத்தில் எடுக்கப்பட்டவிண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில்ஒட்டி, தமிழக / மத்திய அரசின் மற்றும் பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்துசான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
🔵 பிற மாநிலத்தில்பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டுஅட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர்அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச்சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின்சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.
🔵 தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர்தத்துப் பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
🔵 மண முறிவுசெய்து, அதனால் பெயர் மாற்றம்செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
🌺 கட்டணம்:
🔷 பொதுவாக பெயர்மாற்றக் கட்டணம் 09-02-2004 முதல் ரூ.415 மட்டும்.
🔷 தமிழில் பெயர்மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும்அரசிதழ் & அஞ்சல் கட்டணம் ரூ.65.
🌺 செலுத்தும் முறை:
🔵 அலுவலகத்திற்கு நேரில்சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை பணமாகச் செலுத்தலாம்.
🔴 அஞ்சல் மூலம்செலுத்த:
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள்அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிவரைவோலை மூலம்.
பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🌺 விண்ணப்பிக்கும் முன்கவனிக்க வேண்டியவை:
🔷 பெயர் மாற்றத்திற்கானகாரணம் தெரிவிக்க வேண்டும்.
🔷 பழைய பெயர்( ) புதிய பெயரில், என்கிற(Alias) என்று பிரசுரிக்க இயலாது.
🔷 பிரசுரம் செய்யப்பட்டஅரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள்சரிசெய்து கொள்ள வேண்டும்.
🔷 அதற்குப்பின் பிழைகளைதிருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
🔷 பெயர் மாற்றஅறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.
🔷 அதற்கான உறுதிமொழியைஉரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
🔷 விண்ணப்பத்துடன் இணைக்கும்அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
🌺 நிபந்தனைகள்:
🔵 விண்ணப்பதாரர் தவிரவேறு எவரும் எவ்வித தொடர்பும்கொள்ளக் கூடாது.
🔵 பணம் செலுத்துவதுதொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
🔵 இத்துறையால் வழங்கப்பட்டவிண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
🔵 வெளியில் அச்சிட்டஅல்லது ஒளிப்பட நகல் படிவம்ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
🌺 எப்படி பெறுவது?
🔷 அரசிதழை நேரில்பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள்நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ளவேண்டும்.
🔷 தவறினால் அரசிதழ்தபால் மூலம் உரிய நபருக்குஅனுப்பப்படும்.
🔷 தபால் மூலம்அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும்தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.
🔷 இது போன்றநிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள்நேரில் வந்து, தபால்துறை மூலம்திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
🌺 விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
🔵 சுவீகாரம் தொடர்பாகபெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை () தாயார்மட்டுமே, பெயர் மாற்றம் செய்யவிண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம்இட வேண்டும்.
🔵 விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.
🔵 விண்ணப்பதாரர் 18 வயதுபூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லதுபாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.
🔵 பாதுகாப்பாளராக இருப்பின்அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
🔵 கையொப்பத்தின்கீழ் உறவின்முறையை Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
🌺 மேலும் விவரங்களுக்கு:
🔷 உதவி  இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையரகம், சென்னை-2 -இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்புகொள்ளலாம்.
🔷 http://www.stationeryprinting.tn.gov.in/
servicetopublic.htm இத்தளத்திற்குச்சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
🔷 http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm
விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
🌺 தத்து எடுக்கும்பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர்கவனத்திற்கு:
🔵 சுவீகாரத் தந்தை/ தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவுசெய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம்பெறப்பட வேண்டும்.
🔵 பிறப்புச் சான்றிதழ்மற்றும் குடும்ப அட்டை நகல்இணைக்கப்பட வேண்டும்.
🔵 சுவீகாரம் கொடுக்கப்பட்டமகன் / மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின்இதை அரசு வெளியீட்டில் பொதுஅறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும்.
🔵 இதற்கான ஆவணங்கள்பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம்பெறப்பட வேண்டும்.
🔵 பிறப்புச் சான்றிதழ்நகல், குடும்ப அட்டை நகல்இணைக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad