Health Benefits of Coconut Oil - Organic Facts: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday 13 November 2016

Health Benefits of Coconut Oil - Organic Facts:

தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்கள்!! 
பண்டைய காலத்தில் மேனி பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்றைய நவீன உலகில் பலரு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தலை‌யி‌ல் தே‌ய்‌ப்பதே இ‌ல்லை. தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ப் போ‌ன்று உடலு‌க்கு ந‌ன்மை செ‌ய்யு‌ம் ஒரு பொரு‌ள் வேறு எதுவுமே இ‌ல்லை என்பதே அழகியல் நிபுணர்களின் கருத்தாகும்.
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.
தலைக்கு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது. இதனால் தலை‌யி‌ன் தோ‌ல் பகு‌தியை வற‌ண்டு ‌விடாம‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் பாதுகா‌க்கு‌ம்.
பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இதனால் முகமானது களை இழந்து காணப்படும். தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது. தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது.
அ‌திகமாக மே‌க்-அ‌ப் போடு‌ம் பெ‌ண்க‌ள், இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தட‌வி‌க் கொ‌ண்டு படு‌க்கலா‌ம். இதனா‌ல் சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம்.
கேரள மாநிலத்தில் இன்றைக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது. மேனிக்கு உபயோகப்படுத்துவதோடு அன்றாட சமையலுக்கும் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதே அவர்களின் அழகின் ரகசியமாகவும் உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad