Best Home Remedies For Common Cold And Cough: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 16 November 2016

Best Home Remedies For Common Cold And Cough:

சளியால் மூக்கடைப்பா? உடனடியாக நிவாரணம்!

இனிமேல் மழைக்காலம் நமது இந்தியா பூமத்திய ரேகைக்கு அருகாமையில் இருப்பதால் இங்கு வெயிலும் வாட்டி வதக்கும் அதேசமயம் மழையும் அடித்து நொறுக்கும்.  இதனால் இந்திய மக்கள் மழையிலும் வெயிலும் பல வித நோய்களை சந்தித்துவிட்டு வந்திருப்பர். அதற்கான மருந்துக்களையும் பயன்படுத்தத் தெரிந்திருப்பர். அப்படி ஜலதோஷம் எனும் மூக்கடைப்பிற்கு நிறைய மருத்துவங்களை பயன்படுத்தி உள்ளனர்.
மூக்கடைப்பானது உடனே நீங்க ஒரு எந்த மூக்கில் அடைப்புள்ளதோ அந்த மூக்கை விட்டு அடுத்த மூக்கை அடைத்துக்கொண்டு வேகமாக காற்றினை விடவும். தற்போது அடைப்பு ஒரளவு சரியாகிவிடுகின்றன.
மூக்கடைப்பு இன்னும் வேகமாக போக (இரண்டு மூக்கிலும் சளி ஏற்பட்டு அடைத்துக்கொண்டால்) இதுதான் ஒரே வழி. பாத்திரத்தில் ஒரு செம்பு தண்ணீர் விட்டு அதில் சிறிது தைலம் அல்லது கற்பூரம் விட்டு மூடி போட்டு  நன்றாக கொதிக்கவிடவும். பின் அடுப்பைவிட்டு இறக்கி கனமான கம்பளியைப் போர்த்திக் கொண்டு நீராவி பிடிக்க வேண்டும். உடனே சளியானது பறந்துவிடும்.
சளி மூக்கில் மட்டும் ஏற்படுவதில்லை அது சற்று உள்ளே சென்று தொண்டையும் பாதித்துவிடுகின்றது.  இது மிகவும் தொல்லை தந்து மூச்சைக்கூட திணற வைத்துவிடும்.  எனவே எப்படியாவது சளியில் இருந்து விடுபடவேண்டும். எலுமிச்சைபழச்சாற்றினைப் பிழிந்து எடுத்துக்கொண்டு அதில் தேன் இரண்டு டீ ஸ்பூன் எடுத்துக்கொண்டு கலந்து சாப்பிட சளி தொண்டையில் கர கர நிற்கும்
தொண்டை எரிச்சல் மற்றும் சளி இருமல் ஏற்பட்டால் நிறைய தொந்தரவு வரும்.  5 மிளகு விதையை எடுத்துக்கொண்டு நன்றாக பொடித்துக்கொள்ளவும் பின் இரண்டு தம்ளர் தண்ணீர் எடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும் பின்னர் அதில் சிறிதளவு டீத்தூள் மற்றும் மிளகுத்தூளைக் கலந்து கொதிக்கவிடவும்.  பின்னர் பனைவெல்லம் அல்லது சர்க்கரை சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு பருகவும்.  பருகும் போதே விக்கல் ஏற்படும் அதற்கு காரணம் நமது கசாயம் சளியை அறுக்கின்றது என்று அர்த்தம்.
இந்த மருத்துவம் உடனடியாக நிவாரணம் தருபவைகள் செய்து பயன்பெறுங்கள்.

 

No comments:

Post a Comment

Post Top Ad