Strategies to Enhance Students' Memory | Kalvikural.com - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 5 October 2016

Strategies to Enhance Students' Memory | Kalvikural.com

மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க சில குறிப்புகள்

1 . சொல்லக்கேட்டு எழுதுதல்.
( உணவுஇடைவேளையின் போது ) ஒரு மாறுதலுக்காகவகுப்பறையில் உள்ள கரும்பலகையை தவிா்த்துவகுப்பறை வெளிச்சுவற்றில் ஒரு தாளில் எளியவாக்கியம் ( புள்ளி மான் துள்ளிஓடும்) ஒன்றை எழுதி ஒட்டிவிடலாம். அதனைப் படித்துவிட்டு பாா்க்காமல்என் முன்பு
எழுதிக்காட்ட வேண்டும்என மாணவா்களிடம் கூறவும். இப்போது அனைவரும் ஆா்வத்துடன்அவ்வாக்கியத்தை படித்துவிட்டு நினைவில் நிறுத்தி நம் முன்னே எழுதிக்காட்டுவா்.
எழுத்துப்பிழையுள்ள சொல்லை வட்டமிட்டு, மீண்டும்எழுத சொல்ல , தாளை நோக்கிஓடிச் சென்று, எந்த இடத்தில்தவறு செய்தாா்களோ அதனை நன்கு கவனித்துமீண்டும் பிழையின்றி எழுதிக்காட்டுவாா்கள் .
இதுபோன்றுசெய்வதால் மாணவா்களிடையே ஆா்வமும், புதிய அனுபவமும், நல்லஞாபகத்திறனும், பாா்க்காமல் எழுதும் திறனும் வளரும். நாளடைவில் ஆங்கில வாா்த்தைகள், சொற்றொடா்களைஎழுத பயிற்சி அளிக்கலாம்.
மெல்லக்கற்கும் மாணவா்க்கு தனியாக சொற்கள் எழுதிபயிற்சி அளிக்கலாம்.
2. நினைவாற்றலைவளர்க்க,,,,
தொடக்கநிலை மாணவர்க்கு
பேனா, பென்சில், ரூபாய்த்தாள், நாணயம் முதலிய பொருட்களை( 5 முதல் 7 வரை) மாணவர்க்கு காட்டிநன்கு அவர்கள் பார்த்த பிறகுஅவற்றை மூடி வைத்து விடவும். இப்போது அவர்களை ஒவ்வொருவராக அழைத்துமூடி வைத்ததில் என்னென்ன உள்ளது என கேட்கவேண்டும். நன்றாக படிக்கும் மாணவர்கள்உடனே சரியாக பதில் கூறுவார்கள். மெல்லக்கற்போர் ஒன்றிரண்டை விட்டு விட்டு கூறுவார்கள்.
அடுத்தசுற்றில் பொருட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கண்டுபிடிப்பாளர்களும் பெயர்களை கூறுவதில் சற்று முன்னேறி இருப்பர்.
அடுத்தநாளில் பொருட்களுக்கு மாற்றாக வார்த்தை அட்டைகளைவைத்துமுயற்சி செய்யும் போது நினைவாற்றலும் கூடும், மேலும் அவ்வார்த்தை அட்டைகளை நாம் சொல்ல, மாணவர்கள்எழுதினால் பிழையின்றி எழுதி அசத்துவார்கள்
3. விரைவாகப்படிக்கும் ஆா்வத்தை துாண்ட ..
வகுப்புவாாியாக பாடப்புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கத்தைக் கூறி அதில் இடம்பெற்றுள்ள ஒரு சொற்றொடரை கண்டுபிடித்துபடிக்க கூறவும். மாணவா்களிடையே பரபரப்பும், ஆா்வமும் தொற்றிக்கொள்ளும். போட்டி போட்டுக்கொண்டு அப்பத்தியில்இடம் பெற்றுள்ள மொத்த வாக்கியங்களையும் படித்து- கண்டுபிடித்துவிடுவாா்கள். தொடா்ந்து இம்முறையை பின்பற்ற, விரைவாகப் படிக்கும் திறன் அவா்களிடையே தானாகஉருவாகும்.
மெல்லக்கற்கும்மாணவா்க்கு மேற்குறிப்பிட்ட முறையில் ஒரேயொரு சொல்லைக் கூறிபயிற்சி அளிக்கலாம்.
அனைத்தையும்போட்டி முறையில் வழிநடத்த சிறப்பான முடிவு கிடைக்கும்.
நன்றி....
. ரகுபதி இநிஆவேப்பனப்பள்ளி

No comments:

Post a Comment

Post Top Ad