பள்ளி செல்லாத, தோட்டத் தொழிலாளர் குழந்தைகள் பற்றிய விவரத்தை, தென்னிந்திய
தோட்ட அதிபர்களின் சங்க (உபாசி) உதவியுடன் சேகரிக்க, அனைவருக்கும் கல்வி
இயக்கக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.பள்ளி வயதில் உள்ள அனைத்து குழந்தைகளையும்,
பள்ளிகளில் சேர்க்கும் நோக்கத்தை மையமாக வைத்து, அனைவருக்கும் கல்வி
இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், தமிழகத்தில் கணக்கெடுப்பு
நடத்தப்பட்டுள்ளது. வட மாநிலங்களை சேர்ந்த, தோட்டத் தொழிலாளர்களின்
குழந்தைகள், ஏழு பேர், நீலகிரியில், பள்ளிசெல்லாமல் இருப்பது
தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு தோட்டத்துக்கும் சென்று விவரம் சேகரிப்பதில் உள்ள சிரமங்களை
தவிர்க்க, தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) உதவியை நாட,
எஸ்.எஸ்.ஏ., அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.அலுவலர்கள் கூறுகையில்,
'தோட்டங்களில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர், அவர்களது பள்ளி செல்லாத
குழந்தைகள் என, முழுமையான விவரங்களை சேகரிக்க, தென்னிந்திய தோட்ட
அதிபர்கள்சங்கம், (உபாசி) நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்'
என்றனர்.
No comments:
Post a Comment