ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும் பள்ளி கல்வித்துறை உத்தரவு ! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday 8 June 2015

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும் பள்ளி கல்வித்துறை உத்தரவு !

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும். அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுத்தால், மருத்துவ குழுவிற்கு அனுப்பப்படும். வருடத்திற்கு 3 மாதம் என கணக்கிட்டு விடுப்பு எடுக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் விடுப்புஎடுக்கும்போது உயர் அலுவலரின் அனுமதி இல்லாமல் எடுக்கக்கூடாது. அவ்வாறு விடுப்பில் செல்லும் போது உதவி ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து செல்ல வேண்டும். பள்ளிகளில் அளவைப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் அனைத்து தபால்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
பள்ளி வேலை நேரத்தில் வகுப்பை விட்டு வேறு வகுப்பிற்கோ, வேறு அலுவலகத்திற்கோ செல்லக்கூடாது. உதவி ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பள்ளி நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களை அடிப்பதோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாது. மேலும் பெண் பிள்ளைகளை தொடுவதோ, கிள்ளுவதோ, பாலியல் தொந்தரவு செய்வதோ தெரியவந்தால் நடத்தை விதி 20ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர்விடுப்பு (லோக்கல் ஹாலிடே) தேவைப்படுகிற தலைமையாசிரியர் இரண்டு நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad