சென்னையில் நடைபெற்ற குரூப்-1 மெயின்தேர்வை, 3 ஆயிரத்து450 பட்டதாரிகள் எழுதினார்கள் விடைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday 5 June 2015

சென்னையில் நடைபெற்ற குரூப்-1 மெயின்தேர்வை, 3 ஆயிரத்து450 பட்டதாரிகள் எழுதினார்கள் விடைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி:

குரூப்-1 மெயின் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 3 ஆயிரத்து 450பேர் எழுதினார்கள். தேர்வின் விடைகள் ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். குரூப்-1 மெயின் தேர்வு

தமிழக அரசில் துணை கலெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி வணிகவரித்துறை ஆணையர்கள், மாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்ட 79 பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங் களை நிரப்ப குரூப்-1 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. அந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முதல் நிலை தேர்வு, கடந்த ஜூலை மாதம் நடந்தது. அதைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் 4ஆயிரத்து 282 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் மெயின்தேர்வு எழுத தகுதிபெற்றவர்கள் ஆவார்கள். மெயின் தேர்வு கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. தேர்வு தள்ளிவைக்கப்பட்டு நேற்று சென்னையில் நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடந்ததை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன்பார்வையிட்டார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
20 சதவீதம் பேர் எழுதவில்லை
குரூப்-1 மெயின் தேர்வை எழுத 4 ஆயிரத்து 282 பேர் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 20 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 3 ஆயிரத்து 450 பேர் தேர்வு எழுதி உள்ளனர். இந்த தேர்வு சென்னையில் மட்டும் நடத்தப்படுகிறது. அதாவது 43 மையங்களில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் 10 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறைக்கும் தலா 10 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு 7-ந்தேதி வரை நடைபெறும் இந்த தேர்வை எழுத சிலர் வரவில்லை.
விடைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்
இந்த தேர்வுக்கான விடைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். 74 பணியிடங்களைகொண்ட புதிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் 2 வாரத்திற்குள் வெளியிடப்படும். வழக்கமாக தேர்வு எழுத மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்படுகிறது. ஆனால் மாற்றுத்திறனாளி ஆர்.ரமேஷ் என்பவர் தனக்கு எழுத கூடுதலாக 1 மணி நேரம் கேட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி அவருக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் செனாய்நகரில் தேர்வு எழுதுகிறார். இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். பேட்டியின் போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டுஅதிகாரி வெ.ஷோபனா உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad